சட்டவிரோதமாக தங்கத்தை கொண்டு செல்ல முயற்சித்த நபர்கள் கைது!

Read Time:1 Minute, 45 Second

arrest25 இலட்சம் ரூபா பெறுமதியான 500 கிராம் தங்கத்தை உடலில் மறைத்து வைத்து சென்னைக்கு கொண்டு செல்ல முயற்சித்த இந்திய பிரஜைகள் நால்வர் தொடர்பான விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

அவர்களிடம் இருந்த 28 தங்கக் கட்டிகள் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், சுங்கப் பணிப்பாளருமான லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி சென்னை நோக்கி பயணிக்க முயற்சித்த நான்கு இந்திய பிரஜைகள் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பின்னர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய, அவர்கள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

சந்தேகநபர்களில் ஒருவருக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பிணையும், இருவருக்கு தலா இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் இரண்டு பிணைகளும், நான்காவது சந்தேகநபருக்கு ஒரு இலட்சம் ரூபா பிணையும் விதிக்கப்பட்டதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐங்கரநேசன் தொடர்பில் மாவைக்கு கடிதம்: சுரேஷ்!!
Next post ஆளுந்தரப்பு யோசனை முறியடிப்பு!