வவுனியா, வீதி விபத்தில் ஆறு வயது சிறுமி பலி!!

Read Time:2 Minute, 26 Second

IMAG0537வவுனியா, புளியங்குளம் பரிசங்குளம் என்ற கிராமத்தில் A9 வீதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் அதே இடத்தைச் சேர்ந்த கணேசன் நிறோசினி என்ற ஆறு வயது சிறுமி பரிதாபகரமாக தலை சிதறி பலியானார்.

இச் சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது

A9 வீதிக்கரையால் வீடு நோக்கி தனது சகோதரனுடன் குறித்த சிறுமி நடந்து சென்று கொண்டிருந்த போது சுமார் 2.00 மணியளவில் வவுனியா பக்கம் இருந்து வந்த டிப்பர் வாகனம் சிறுமியை மோதியது.

சிறுமி வாகனத்தால் தூக்கி எறியப்பட்டு நடுவீதியில் சில்லால் நசிக்கப்பட்டு துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தந்த பொலிசார் மோதிய வாகனச்சாரதி பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர் என்பதனால் வாகனத்தையும் சாரதியையும் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு அனுப்பி வைக்க முயன்றுள்ளனர்.
இதை அறிந்து அங்கு கூடிய பொது மக்கள் வாகனத்தை எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

வாகனத்தை எடுக்க விடாமல் வீதியின் குறுக்கே படுத்த போதும் பெண்கள், ஆணகள் என்ற பாரபட்சம் இன்றி பொலிசார் அனைவரையும் இழுத்தெறிந்து விட்டு வாகனத்தை கொண்டு சென்று விட்டார்கள்.

உடனடியாக சடலத்தையும் வவுனியா வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்ற பின்னர் வெறும் கண்துடைப்புக்காகவும், சம்பவத்தில் வாகனச்சாரதி தவறு விடவில்லை என்பதனைக்காட்ட விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி வீதியை அளந்துள்ளார்கள்.

இதனால் கொதிப்படைந்த மக்கள் பொலிசாருடன் வாக்குவாதப்பட, பொதுமக்கள் மீது பொலிசார் சரமாரியாக தாக்கியுள்ளார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடும் நிதி சிக்கல் அரசு நிறுவனங்களை மூடியது அமெரிக்கா..!!!
Next post விக்கினேஸ்வரன் முன்னிலையில் அனந்தி சசிகரன் பதவிப் பிரமாணம் எடுக்க மாட்டார்