சீற்றுக்காக கூட்டமைப்புக்குள் குத்துவெட்டு! ஜந்து பேருக்கு ஒரு சீற் பங்கீடு!

Read Time:1 Minute, 57 Second

tna -sampanthanதமிழ் தேசியக் கூட்டமைப்பு வடமாகாணசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று 28 ஆசனங்களை தனதாக்கியது. இதனால் 2 போனஸ் ஆசனங்களும் கூட்டமைப்புக்கே கிடைத்தது.

இதில் ஒரு ஆசனம் கூட்டமைப்பின் தலைமை தன்னிச்சையான ஒப்பந்தம் மூலம் மன்னாரைச் சேர்ந்த முஸ்லிம் பிரதிநிதி அஸ்மினுக்கு வழங்கியுள்ளது.

மற்றைய ஆசனம் யாருக்கு என்பது குறித்து இழுபறி நிலை காணப்பட்டது.

இந் நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இதனை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜந்து கட்சிகளுக்கும் சுழற்சி முறையில் ஒருவருக்கு ஒரு வருடம் வீதம் வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் முதலில் முல்லையைச் சேர்ந்த கமலா குணசீலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழர் விடுதலைக் கூட்டனி சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து மற்றக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வருவார்கள். இவர்களுக்கான பதவிக் காலம் ஒரு வருடம் மாத்திரமே.

இவ்வாறு சீற்றக்காக கூட்டமைப்பு அடிபடுவது மக்களுக்கு சேவை செய்யவா? என்ற சந்தேகம் வாக்களித்த மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

ஒரு போனஸ் ஆசனத்தில் நிரந்தர முடிவு எடுக்க முடியாமல் 5 பேருக்கு பங்கீடு செய்யும் கூட்டமைப்பா? தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுத் தரப் போகிறது? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பதுளை – கொழும்பு ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி!!
Next post அமைச்சு பதவிகள் தொடர்பில் இந்த தீர்மானமும் இன்றி கூட்டமைப்பின் கூட்டம் நிறைவு!