ஈராக்கில் பெண் வேடத்தில் தீவிரவாதிகள் படை தாக்குதல்: மசூதியில் குண்டு வெடித்து 11 பேர் பலி

Read Time:2 Minute, 14 Second

Sucide.bomping.jpgஈராக்கில் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டினரை தீவிர வாதிகள் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஷியா, சன்னி பிரிவினருக்கும் இடையே மோதலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தீவிரவாதிகளின் தலை வன் சர்காலி கொல்லப்பட்டதில் இருந்து ஷியா பிரிவினர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. பாக்தாத் நகரின் வடக்கு பகுதியில் ஷியா பிரிவினரின் புரகாமசூதி உள்ளது. இந்த மசூதியில் நெற்று வெள் ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் திடீர் என்று குண்டு வெடித் தது. இதில் அந்த மசூதியில் இருந்து ஒரு பகுதி இடிந்து தரைமட்டமானது.

இதில் அங்கு தொழுகைக்கு வந்த 11பேர் உடல்சிதறி பலியானார்கள்.மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். அந்த பகுதி முழுவதும் பலியானவர்களின் உடல்கள் சிதறி கிடந்தன. பெண் வேடம்போட்டு அந்த மசூதிக்கு வந்த சன்னி பிரிவு தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இந்த தாக்குதலை நடத்தியது. விசாரணையில் தெரிய வந்தது.

இதே மசூதியில் கடந்த ஏப்ரல் மாதமும் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. அப்போது நடந்த தாக்குதலில் 71 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நேற்றுகாலை பாஸ்ரா நகரில் சன்னி பிரிவை சேர்ந்த ஒரு மத தலைவரை மர்ம மனிதர்கள் சுட்டுக்கொன்றனர். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையால் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அவுஸ்திரேலிய பாராளுமன்றில் புலிகள்மீது கண்டனம்
Next post வாழைச்சேனை ஈ.பி.டி.பி அலுவலகத்தில் கிளைமோர் கண்டுபிடிப்பு