வளர்த்த கடா மட்­டு­மல்ல, குளோ­னிங்கில் உரு­வான கடாவும் மார்பில் பாயக்­கூடும்!!

Read Time:2 Minute, 40 Second

2305cloneதென்­கொ­ரி­யாவில் அண்­மையில் நடந்த சம்­ப­வ­மொன்று வளர்த்த கடா மட்­டு­மல்ல, குளோ­னிங்கில் உரு­வான கடாவும் மார்பில் பாயக்­கூடும் என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது.

பார்க் ஸே பில் (54 வயது) தென்­கொ­ரி­யாவின் பிர­பல்­ய­மான முளை­ய­வியல் விஞ்­ஞா­னி­யும் பேரா­சி­ரி­ய­ரு­மாவார். இவர் 4 வரு­டங்­க­ளுக்கு முன்னர் குளோனிங் முறையில் மாடு ஒன்றை உரு­வாக்­கினார்.

அண்மையில் இவர் அந்த மாடு குறித்த வீடியோ ஒன்றை பதிவு செய்­துள்ளார். இதன்­போது அந்த மாடு திடீரெனப் பேரா­சி­ரி­யரைத் தாக்க ஆரம்­பித்­துள்­ளது.

சுமார் 15 நிமி­டங்கள் வரையில் மாட்டின் தாக்­கு­த­லுக்கு இலக்­கான பார்க்கின் விலா என்­புகள் 5 முறி­வ­டைந்­துள்­ள­துடன் முள்­ள­ந்தண்டும் பாதிப்­புக்­குள்­ளா­கி­ யுள்ளனது.

இத்­தாக்­குதல் சம்­ப­வத்­தின்­போது பார்க், விசே­ட­மான ஆடை­யொன்­றையும் நீண்ட கால­ணியை அணிந்­து­கொண்­டி­ருந்­துள்ளார்.

இதனால் சுமார் 770 கி.கி. நிறை­யு­டைய இந்த மாட்டின் தாக்­கு­தலி­லி­ருந்து அவரால் இல­குவில் தப்பிச் செல்ல முடி­ய­வில்லை என இவர் கட­மை­யாற்றும் தென்­கொ­ரி­யாவின் ஜெஜு தேசிய பல்­க­லைக்­க­ழக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

தாக்­கு­த­லுக்­குள்­ளான பேரா­சிரியர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். இவர் குண­ம­டை­வ­தற்கு குறைந்­தது 8 வாரங்­க­ளாகும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்றது.

இறந்­த­வொரு மாட்­டி­லி­ருந்து பெறப்­பட்ட கலங்­க­ளி­லி­ருந்தே இந்த மாட்டை இவர் உரு­வாக்­கினார்.

நோய்களை குணப்படுத்தும் நோக்கில் விஞ்ஞானிகள் பலர் முயற்சிக்கும் மனித முளையவியல் துறையிலும் பேராசியர் ஸேபில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2305clone

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சன்னி லியோன் கவர்ச்சி படங்கள்..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post உடலை வெளிப்படுத்தி நடிக்க ராணி முகர்ஜி, கரீனா கபூர் மறுப்பு!