பாடகி “மாயா” அருள்பிரகாஷத்திடம் (M.I.A ) 20 கோடி ரூபா கோரி வழக்கு..!!

Read Time:8 Minute, 34 Second

mia-03இலங்­கை­யி­லி­ருந்து பிரிட்­ட­னுக்கு புலம்­பெ­யர்ந்து உலகப் புகழ்­பெற்ற  பாட­கி­யாக விளங்கும் மாதங்கி மாயா அருள்­பி­ர­காஷம் 15 இலட்சம் அமெ­ரிக்க டொலர்கள் (சுமார் 20 கோடி இலங்கை ரூபா ) கோரி அமெ­ரிக்க சுப்­பர்போல் கால்பந் பந்­தாட்ட விளை­யாட்டு ஏற்­பாட்­டா­ளர்கள் வழக்குத் தொடுத்­துள்­ளனர்.

M.I.A என்ற பெயரில் பிர­பல பாட­கி­யாக விளங்கும் மாதங்கி மாயா அருள்­பி­ர­காஷம், கடந்த வருடம் முற்­ப­கு­தியில் அமெ­ரிக்­காவின் தேசிய கால்­பந்தாட்ட லீக் இறு­திப்­போட்­டியின் இடை­வே­ளையில் இசை நிக­ழச்­சி­யொன்றை நடத்­து­வ­தற்கு ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டி­ருந்தார்.


இந்­நி­கழ்ச்­சி­யின்­போது பாடி ஆடிக்­ கொண்­டி­ருந்த M.I.A நடு­வி­ரலை உயர்த்திக் காண்­பித்தார். அவ­ம­திப்­பான சைகை­யாக இது கரு­தப்­படும் நிலையில் பாடகி எம்.ஐ.ஏ.வின் இச்­செ­யற்­பாடு சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது.

தொலைக்­காட்­சியில் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பா­கிக்­ கொண்­டி­ருந்த இந்­நி­கழ்ச்­சியில் அவர் இப்­படி செய்­த­மையால் அவர் மீதான விமர்­ச­னங்கள் அதி­க­ரித்­தன. ஏரா­ள­மான ஊட­கங்­களில் இது இவ்­வி­டயம் தலைப்புச் செய்­தி­யா­கி­யது.

18 மாதங்­க­ளுக்­குமுன் நடை­பெற்ற இச்­சம்­பவம் தொடர்­பாக எம்.ஐ.ஏ.விடம் 15 இலட்சம் டொலர்­களைக் கோரி சுப்­பர்போல் நிகழ்ச்சி ஏற்­பாட்­டா­ளர்கள்  வழக்குத் தொடுத்­துள்­ளனர்.

அமெ­ரிக்­காவில் மிகப் பிர­ப­ல­மான விளை­யாட்­டுக்­களில் ஒன்­றாக அமெ­ரிக்கப் பாணி கால்­பந்­தாட்ட விளை­யாட்டு விளங்­கு­கி­றது.

தலைக்­க­வசம் உட்­பட பாது­காப்புக் கவ­சங்­களை அணிந்து றக்பி பாணியில் விளை­யா­டப்­படும் விளை­யாட்டு இது.

ஒவ்­வொரு வரு­டமும் இறு­திப்­போட்­டியின் இடை­வே­ளையில் இசை நிகழ்ச்­சி­யொன்று நடத்­தப்­படும்.



சுப்­பர்போல் என அழைக்­கப்­படும் இந்த இறு­திப்­போட்­டியின் இசை­நி­கழ்ச்­சியை நடத்­து­வ­தற்கு மைக்கல் ஜக்ஸன், மடோனா போன்ற மிகப் பிர­ப­ல­மான பாட­கர்கள், பாட­கிகள் அழைக்­கப்­ப­டுவர்.

கடந்த வருடம் பெப்­ர­வரி மாதம் இன்­டி­யானா பொலிஸ் நகரில் நடை­பெற்ற சுப்­பர்போல் போட்­டியின் இடை­வே­ளையில் மடோனா, எம்.ஐ.ஏ. நிக்கி மினாஜ் முத­லானோர் இசை நிகழ்ச்சி நடத்­தினர்.

இதன்­போது பாடிக்­ கொண்­டி­ருந்த வேளை­யி­லேயே திடீ­ரென நடு­வி­ரலை உயர்த்திக் காண்­பித்தார் எம்.ஐ.ஏ.  

இந்­நி­கழ்ச்­சியை என்.பி.சி. தொலைக்­காட்­சியில் நேர­டி­யாக பார்த்­துக்­ கொண்­டி­ருந்த மில்­லியன் கணக்­கானோர் மாதங்­கியின் செயலை பார்த்து திகைப்­ப­டைந்­தனர்.

இதற்­காக அமெ­ரிக்கா தேசிய கால்­பந்­தாட்ட லீக்கும் (என்.எவ்.எல்) என்.பி.சி. தொலைக்­காட்சி அலை­வ­ரி­சையும் ரசி­கர்­க­ளிடம் மன்­னிப்பு கோரின.

பாடகி எம்.ஐ.ஏவுடன் மேடையில் இருந்த சிரேஷ்ட பாடகி மடோ­னாவும் இச்­செ­யற்­பாட்­டினால் மகிழ்ச்­சி­ய­டை­ய­வில்லை எனத் தெரி­வித்தார்.

ஆனால், இவ்­வி­ட­யத்தை பெரி­து­ப­டுத்த மடோனா விரும்­ப­வில்லை.

இந்­நி­லையில், பாடகி எம்.ஐ.ஏவிடம் 15 இலட்சம் டொலர்­களைக் கோரி அமெ­ரிக்க தேசிய கால்­பந்­தாட்ட லீக் (என்.எவ்.எல்.) வழக்குத் தொடுத்­துள்­ளது.

mia-02
உல­க­ளா­விய கவ­னத்தை ஈர்ப்­ப­தற்­காக கெம­ராவை நோக்கி அவர் இந்த சைகையை காட்­டி­யுள்­ள­தாக பாடகி எம்.ஐ.ஏ.மீது என்.எவ்.எல். குற்றம் சுமத்­தி­யுள்­ளது.

இதற்­காக அவ­ருக்கு 15 இலட்சம் டொலர் அப­ராதம் விதிப்­ப­தற்கு அந்­நி­று­வனம் தீர்­மா­னித்த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சுமார் ஒன்­றரை வரு­டங்­க­ளாக நடை­பெறும் இந்த சட்ட மோதல் குறித்த விட­யங்­களை இப்­போ­துதான் பகி­ரப்­ப­டுத்­தி­யுள்ளார் எம்.ஐ.ஏ.

mia-001இது குறித்து பாடகி எம்.ஐ.வின் சட்­டத்­த­ர­ணி­யான ஹோவார்ட் கிங் கூறு­கையில், தேசிய கால்­பந்­தாட்ட லீக்கும் அதன் ரசி­கர்­களும் மேற்­படி சம்­பவம் குறித்து இந்­த­ளவு ஆவே­சத்தை வெளிப்­ப­டுத்­து­வது அபத்­த­மா­னது என்றார். இந்த அப­ரா­தத்­துக்கு எதி­ராக எம்.ஐ.ஏ. போரா­டுவார் எனவும் சட்­டத்­த­ரணி ஹோவார்ட் கிங் கூறி­யுள்ளார்.

சுப்­பர்போல் இசை நிகழ்ச்­சியில் இத்­த­கைய சர்ச்சை ஏற்­ப­டு­வது இது முதல் தட­வை­யல்ல. 2004 ஆம் ஆண்டு நடை­பெற்ற நிகழ்ச்­சி­யின்­ போது, ஜெனட் ஜக்­ஸனும் ஜஸ்டின் டிம்­பர்­லாக்கும் மேடையில் பாடி ஆடிக்­ கொண்­டி­ருந்­த­ போது, ஜெனட் ஜக்­ஸனின் மேலங்­கியை டிம்­பர்லாக் பிடித்­தி­ழுத்தார்.

அப்­போது பாடகி ஜெனட் ஜக்­ஸனின் ஆடை கிழிந்து அவரின் மார்­பகம் வெளிப்­பட்­டமை பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தமை குறிப்­பி­டத்­தக்­கது.


M.I.A….
இலங்­கையை சேர்ந்த பொறி­யி­ய­லா­ளரும் “ஈரோஷ்” அமைப்பின் ஸ்தாப­கர்­களில் ஒரு­வ­ரு­மான அருள்­பி­ர­கா­ஷத்தின் (அருளர்) மக­ளாக 1975 ஆம் ஆண்டு லண்­டனில் பிறந்­தவர் மாதாங்கி மாயா.

அவர் 6 மாத குழந்­தை­யாக இருந்­த­போது அவரின் குடும்­பத்­தினர் யாழ்ப்­பா­ணத்­துக்கு திரும்­பினர்.

1986 இல் மாயா தனது தாயார் மற்றும் சகோ­த­ர­ருடன் மீண்டும் லண்­ட­னுக்குச் சென்றார்.

இசைத்­து­றையில் ஆர்வம் காட்­டிய அவர், 2000 ஆம் ஆண்டு எம்.ஐ.ஏ. என்ற பெயரில் இசைத்­துறை வாழ்க்­கையை அவர் ஆரம்­பித்தார்.

பாடகி, பாட­லா­சி­ரியர், புகைப்­ப­டக்­க­லைஞர், மொடல், என பல­து­றை­களில் ஈடு­ப­டுபவர் இவர்.

எம்.ஐ.ஏ. என்­பது அவரின் பெய­ரி­லுள்ள எழுத்­துக்­க­ளாகும். அதே­வேளை மிஸ்ஸிங் இன் அக்ஷன் என்­பதன் சுருக்­கமே எம்.ஐ.ஏ. இது­வெ­னவும் கூறப்படுகிறது.

2005 இல் வெளியான முதலாவது பாடல் அல்பத்துக்கு தந்தையின் பெயரான அருளர் என பெயரிட்ட எம்.ஐ.ஏ. 2007 இல் வெளியிட்ட அல்பத்துக்கு “கலா” என தனது தாயின் பெயரை சூட்டினார்.

அவரின் “பேப்பர் பிளேன்” என்ற பாடல் அவருக்கு உலகளாவிய புகழை பெற்றுக் கொடுத்தது.

mia-01பாடகர் பெஞ்சமின் புரொவ்மனை காதலித்த பாடகி எம்.ஐ.ஏ. 2009 ஆம் ஆண்டு ஆண் குழந்தையொன்றுக்கு தயானார்.

கடந்த வருடம் இத்தம்பதியினர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

mia-03

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மன்னாரில் இரு சிறுவர்கள் கிணற்றில் வீழ்ந்து மரணம்!
Next post அவ்வப்போது கிளாமர் படங்கள்..