இரு போனஸ் ஆசனங்களில் ஒன்று அஸ்மீனுக்கு, மற்றையது சுழற்சி முறையில் ஐவருக்கும் -செல்வம் எம்.பி.

Read Time:2 Minute, 30 Second

SELVAM_TWOதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த போனஸ் ஆசனங்கள் இரண்டில் ஒன்றை முஸ்ஸிம் வேட்பாளர் அயூப் அஸ்மீனுக்கும் மற்றையதை சுழற்சி முறையில் ஐந்து வேட்பாளர்களுக்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அமோக வெற்றியை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் இரண்டு போனஸ் ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் ஒன்றை முஸ்லிம் வோட்பாளர் ஒருவருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட முஸ்ஸிம் வேட்பாளர் அயூப் அஸ்மீன் என்பருக்கே அந்த போனஸ் ஆசனங்களில் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

எஞ்சியுள்ள போனஸ் ஆசனத்தை சுழற்சி முறையில் ஐந்து வேட்பாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் முதலில் யாருக்கு வழங்குவது என்று இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி ஐந்து வருட மாகாண சபை பதவிக் காலத்தில் ஐவர் தலா ஒவ்வொரு வருடம் மாகாண சபை உறுப்பினர்களாக பதவி வகிக்கவுள்ளனர்.

வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற ஐவருக்கு இந்த போனஸ் ஆசனம் பகிரப்படும் என செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘இலங்கை போரின் போது ஐ.நா. செயல்பட தவறி விட்டது’: ஐ.நா. பொதுச்செயலாளர் ஒப்புதல்
Next post சூடானில் கலவரம்: இணையை தளங்கள் துண்டிப்பு