அரசியல் தீர்வை வழங்குமாறு வடக்கு மக்கள் ஆணை!!
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்தான் என வடக்கு மக்கள் நடந்து முடிந்த மகாணசபை தேர்ததல் மூலம் ஆணித்தரமாக சர்வதேசத்திற்கும் அரசாங்கத்துக்கும் நிருபித்துள்ளனர்.
எனவே இதணை அரசாங்கமும் சர்வதேசமும் உணர்ந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களுக்கு அம்பாறை மாவட்ட மக்கள், மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதாக அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் நடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிட்டு வரலாறு காணாத வெற்றியீட்டியுள்ளதுடன் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் தமது அரசியல் ரீதியான அபிலாஷைகளுக்காக பல்வேறு வடிவங்களில் 60 வருடங்களுக்கு மேலாக போராடி வந்தனர்.
இந்தநிலையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அரசாங்கம் செவிசாய்க்காது புறக்கணித்தே வந்துள்ளது. இருந்தபோதும் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளை வெல்வதற்காக சளைக்காது வெட்டவெட்ட தமிழ் மக்கள் மீண்டும் எழுவோம் தலைநிமிர்ந்து நிற்போம் என அரசியல் ரீதியாக மீண்டும் உலகிற்கும் அரசாங்கத்துக்கும் வடக்கு மாகாண சபை தேர்தல் மூலம் உணர்த்தியுள்ளனர்.
கடந்த 25 வருடத்கிற்கு பின்னர் இடம்பெற்ற மாகாணசபை தேர்தலில் பல்வேறுபட்ட அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ் தேசிய கூட்டமைபே என்பதை ஆணித்தரமாக உணர்தியுள்ளதுடன் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லை என்பவர்களுக்கு ஜனநாயக ரீதியாக சவுக்கடி கொடுத்துள்ளனர்.
எங்களுக்கு முதலில் அரசியல் ரீதியான தீர்வினை தருமாறும் வடக்கில் வசந்தம் அபிவிருத்தி என பூச்சாண்டி காட்டி எமது வாக்குகளை கொள்ளையிட முடியாது என அரசின் ஊதுகுழலாக செயற்படுபவர்களுக்கு வடக்கு கிழக்கு எமது தமிழ் மக்களின் பூர்வீகம் அதனை தமிழ் மக்களே ஆளவேண்டும் என ஆணித்தரமாக தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக தீர்ப்பளித்துள்ளனர்.
எனவே இவற்றை எல்லாம் இனியாவது அரசும் சர்வதேசமும் உணர்ந்து தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் ரீதியான அபிலாஷைகளை நிறைவேற்றி தமிழ் மக்கள் நிம்மதியாக இந்த நாட்டில் வாழ்வதற்கு வழிசெய்யவேண்டும்.
நடந்து முடிந்த தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்த வடக்கு மாகாண தமிழ் மக்களுக்கு அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பிர்களான ரி.கலையரசன், இராஜேஸ்வரன் மற்றும் காரைதீவு, திருக்கோவில், ஆலையடிவேம்பு, நாவிதன்வெளி ஆகிய பிரதேச சபை தவிசாளர்கள் ஊறப்பினர்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating