கென்யா தீவிரவாத தாக்குதல்: தீபாவளிக்கு தமிழகம் வர திட்டமிட்ட ஸ்ரீதர் நடராஜன் உயிரிழந்த சோகம்

Read Time:3 Minute, 3 Second

kenya-005கென்யாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான சென்னையை சேர்ந்த பொறியாளர் ஸ்ரீதர் நடராஜன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட தமிழகம் வர இருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 68 பேர் பலியானார்கள். இவர்களில் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதர் நடராஜன் என்பவரும் ஒருவர்.

இவரது மனைவி மஞ்சு என்ற மஞ்சுளா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த மஞ்சுளா திருச்சி உறையூர் வண்டிக்கார தெருவைச் சேர்ந்தவர்.

இவரது தந்தை வெங்கட்ராமன் இறந்து விட்டார். இவர் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர்.

இவரது மனைவி பத்மா. இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். 2வது மகள் தான் மஞ்சு. இவர் எம்.காம் படித்து உள்ளார்.மஞ்சுவுக்கும், சென்னையைச் சேர்ந்த பொறியாளர் ஸ்ரீதருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கென்யாவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஸ்ரீதர், திருமணம் முடிந்ததும் மனைவியை அங்கு அழைத்துச் சென்றார்.

குடும்பத்துடன் வசித்து வந்த இந்த தம்பதிக்கு குழந்தை கிடையாது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர்கள் தமிழகம் வருவது உண்டு.ஸ்ரீதருக்கு சென்னை அசோக் நகர் மாந்தோப்பு காலனி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு உள்ளது. ஸ்ரீதரின் பெற்றோர் இறந்துவிட்டதால், அந்த வீடு தற்போது வாடகைக்கு வி்ட்டுள்ளது.இந்தாண்டு தீபாவளிக்கு தமிழகம் வருவதாக திட்டமிட்டு இருந்தனர் ஸ்ரீதர் தம்பதியினர்.

இதுபற்றி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்திருந்த நிலையில் தான் துரதிருஷ்டவசமாக, நைரோபி வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஸ்ரீதர் பரிதாபமாக உயிர் இழந்தார். மஞ்சு படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீராடச் சென்றவர் சடலமாக மீட்பு
Next post போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு சந்தர்ப்பம்