“நான் ஒரு வெடிகுண்டு” டிசர்ட் அணிவித்த தாய்க்குச் சிறை

Read Time:3 Minute, 42 Second

arrested women 2பிரான்சில் தனது 3 வயது மகனுக்கு அணிவித்த டி சர்ட்டால் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அணிபவித்து வருகிறார் தாய் ஒருவர்.

பெட்ரோமாஸ் லைட்டே தான் வேனுமா..?, நான் பேஸ்புக்கில் இல்லை’ என வித்தியாசமான வாசகங்கள் அமையப் பெற்ற டி சர்ட்களை அணிவது ஆண், பெண் என இரு பாலருக்குமே விருப்பமான ஒன்று தான்.

அந்தவகையில், பிரான்சு நாட்டில் தனது 3 வயது மகனுக்கு ‘நான் ஒரு வெடிகுண்டு’ என எழுதப்பட்ட டி சர்ட்டை அணிவித்து பள்ளிக்கு அனுப்பிய காரணத்திற்காக அவனது தாயார் கைது செய்யப்பட்டுள்ளார் என்றால் விநோதமாகத் தானே இருக்கிறது.

பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் பவுச்ரா என்ற பெண்மணி தனது 3 வயது மகனான ஜிகாத்ஸ்க்கு ‘நான் ஒரு வெடிகுண்டு’ என்ற வார்த்தையும், செப்டம்பர் 11 என்ற தேதியும் எழுதப்பட்ட டிசர்ட்டை அணிவித்து பள்ளிக்கு அனுப்பியுள்ளார்.

செப்டம்பர் 11 என்பது அமெரிக்காவில் நடைபெற்ற தாக்குதல் நாள் என்பதாலும், டிசர்ட்டில் நான் ஒரு வெடிகுண்டு என்ற வார்த்தையும் இடம்பெற்றிருந்ததாலும் அச்சிறுவனின் டிசர்ட் அங்கு பரபரப்பைக் கிளப்பியது.

டிசர்ட்டால் உண்டான சர்ச்சையைத் தொடர்ந்து அந்த மாணவனின் தாயார் மற்றும் மாமாவின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தீவிரவாத ஆடை….நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், தீவிரவாத சம்பவங்களோடு தொடர்புடைய ஆடையை அணிவித்த குற்றத்திற்காக அச்சிறுவனின் தாயாருக்கு ஒரு மாத சிறையும், 2,000 யூரோ அபராதமும், அத்தோடு அச்சிறுவனின் மாமாவிற்கு 2 மாத சிறையும் 4,000 யூரோ அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த விநோத வழக்கு குறித்து மாணவனின் தாயார் கூறுகையில், ‘இந்த டிசர்ட்டியினை என்னுடைய அண்ணன் வாங்கி கொடுத்தார். மேலும் அதில் கூறப்பட்டுள்ள நான் ஒரு வெடிகுண்டு என்பதற்கு நான் அழகானவன் என்ற அர்த்தம் என்றும் அதோடு செப்டம்பர் 11 2009 என்பது என் மகனுடைய பிறந்த தேதி’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது அண்ணன் இது குறித்து கூறுகையில், ‘நாங்கள் தீவிரவாதத்தோடு சம்பந்தப்படுத்தி இந்த டிசர்ட்டினை அணிந்துவிடவில்லை. அதில் உள்ளது ஒரு நகைச்சுவையான விசயமே ஆகும்’ எனக் கூறியுள்ளார்.

இது குறித்து இவர்களது வழக்கறிஞர் கூருகையில், ‘ இந்த விதிமுறையானது கடுமையானதாக உள்ளது என்றும் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முகமது நபியின் அம்மா பெயர் தெரியாததால் இந்தியரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்
Next post கள்ளக்காதல் விவகாரம்: சீனாவில் 2 வயது ஆண் குழந்தை 6வது மாடியிலிருந்து வீசிக் கொலை