ஆசிரியையை முழந்தாளிட வைத்தவரின் மருமகன் தோல்வி

Read Time:1 Minute, 59 Second

herathநவகத்தேகம நவோதயா பாடசாலையின் ஆசிரியையை முழந்தாளிட வைத்த முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவின் மருமகன் தோல்வியடைந்துள்ளார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவிற்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

எனினும் அவருக்குப் பதிலாக அவரது சகோதரியின் மகனான நிலந்த விமலவீர, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக வடமேல் மாகாண சபை தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டார்.

எனினும் இத்தேர்தலில் 11,728 விருப்பு வாக்குகளைப் பெற்ற அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பட்டியலில் 15ஆவது இடத்தை பெற்றார். எனினும் புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு 9 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்தது.

இதனால் இவர் தோல்வியடைந்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற வடமேல் மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிட்ட ஆனந்த சரத் குமார 13,605 விருப்பு வாக்குகளைப் பெற்று பட்டியலில் 12ஆவது இடத்தில் காணப்பட்டார்.

அப்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு புத்தளம் மாவட்டத்தில் 11 ஆசனங்களை மாத்திரம் பெற்றிருந்தது. எனினும் அக்கட்சிக்கு கிடைத்த போனஸ் ஆசனத்தின் மூலம் இவர் வடமேல் மாகாண சபை உறுப்பினரானமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீந்தி சென்று பாடம் கற்பிக்கும் ஆசிரியர்!!
Next post முகமது நபியின் அம்மா பெயர் தெரியாததால் இந்தியரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்