நீந்தி சென்று பாடம் கற்பிக்கும் ஆசிரியர்!!

Read Time:2 Minute, 51 Second

006இந்தியாவின், கேரளா மாநிலத்தில் ஆசிரியர் ஒருவர் தினமும் நீந்தி சென்று மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார்.

இந்தியா, மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆரம்ப பள்ளி ஆசிரியராக கடமைபுரியும் அப்துல் மாலிக் என்ற (30 வயது) ஆசிரியரே இவ்வாறு நீந்திச் சென்று மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார்.

தான் கற்பிக்கும் பாடசாலை 12 கிலோமீற்றர் தூரத்தில் இருப்பதால் இவ்வாறு நீந்திச் சென்று பாடம் கற்பிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆற்றில் கழுத்தளவு தண்ணீர் காணப்படுகின்றது. இடுப்பில் இறப்பர் டியூபொன்றை கட்டிகொண்டு தனது மதியபோசன உணவு மற்றும் காலணி, மேலாடை ஆகியவற்றை ஒரு கையில் தூக்கிக்கொண்டு தனது நீச்சல் பயணத்தை இவர் ஆரம்பிக்கின்றார்.

ஆற்றைக் கடந்து வந்த பின்னர் முதலில தனது ஆடைகளை உலர வைக்கும் இவர் பின்னர் மலைபகுதியை கடந்து செல்கின்றார். இதன்போது அவரது ஆடைகள் உலர்ந்து விடுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப பாடசாலை மலைப்பாங்கான பகுதியில் காணப்படுவதால் இவர் ஆற்றை கடந்தபின் மலையேற வேண்டிய தேவைக் காணப்படுகின்றது.

அரசாங்க பாடசாலையான மேற்படி பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இவருக்கு மாதாந்தம் சம்பளம் 25,000 கிடைக்கின்றதாம்.
20 வருடமாக இந்தப் பாடசாலையில் கல்விக் கற்பிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வரும் இவர் தனது கற்பித்தலுக்கு அப்பால் பல நலன்புரி சேவைகளையும் முன்னெடுத்து வருகின்றார்.

‘பஸ்சில் வந்தால் 12 கிலோமீட்டர் தூரத்தை கடக்க வேண்டிவரும். அதற்குள் பாடசாலைக்கு நேரமாகி விடும். எனவேதான் நீச்சலடித்து வருகிறேன்.

இது சுலபமானதும் கூட, குறித்த நேரத்துக்கு பாடசாலைக்கும்; வந்து விடலாம். பள்ளிக்கூடத்திற்கு நேரத்திற்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி வருகிறேன்’ என அவ் ஆசிரியர் தனது நீச்சல் பயணம் குறித்து தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதி அமெரிக்கா பயணமானார்
Next post ஆசிரியையை முழந்தாளிட வைத்தவரின் மருமகன் தோல்வி