கிணற்றில் 15 நாட்களாக சிக்கியிருந்த சீனப் பெண் உயிருடன் மீட்பு

Read Time:2 Minute, 16 Second

kinaru-03கிண­றொன்றில் விழுந்த பெண்­ணொ­ருவர் 15 நாட்­களின் பின் உயி­ருடன் மீட்­கப்­பட்ட சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

ஸு கிஸியு (38 வயது) என்ற மேற்­படி பெண் ஹெனான் மகா­ணத்­தி­லுள்ள ஸொங்பெங் கிரா­மத்­தி­லுள்ள 12 அடி ஆழ­மான கைவி­டப்­பட்ட கிணற்றில் விழுந்­துள்ளார்.

அவர் சோளத்தை உண்டும், மழை நீரை அருந்­தியும் உயிர் பிழைத்­தி­ருந்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து கடந்த திங்­கட்­கி­ழமை மாலை அவர் மீட்புப் பணி­யா­ளர்­களால் மீட்­கப்­பட்­டுள்ளார்.

அந்தக் கிணறு உய­ர­மாக வளர்ந்த சோளச் செடி­களால் மூடப்­பட்­டி­ருந்­த­துடன், கிணற்றின் உட்­புறச் சுவர் ஏற முடி­யாது வழு­வ­ழுப்­பாக இருந்­துள்­ளது.

அந்தப் பெண் கிணற்­றுக்குள் விழுந்­த­போது சோளச் செடி­களைப் பற்றி தொங்­கி­யுள்ளார்.

ஆனால், அவ­ரது பாரத்தை தாங்­காத சோள செடிகள் வேருடன் அறுந்து வந்­த­தை­ய­டுத்து, அவர் வரண்ட கிணற்­றுக்குள் விழுந்­துள்ளார்.

இந்­நி­லையில் அவ­ரது கணவர் லி குன்­மிங்கும் உற­வி­னர்­களும் ஸு கிஸி­யுவை தேடும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டனர். எனினும், அவர்­களால் அவரைக் கண்­டு­பி­டிக்க முடி­யாது போனது.

கடந்த 16ஆம் திகதி சோள அறு­வ­டைக்கு சென்ற விவசாயி ஒருவர் கிணற்றிலிருந்து கூச்­ச­லி­டு­வதைக் கேட்டு மீட்புப் பணி­யா­ளர்­க­ளுக்கு அது தொடர்பில் அறி­வித்தார்.

இத­னை­ய­டுத்து மீட்­கப்­பட்ட ஸு கிஸியு தற்­போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நிறை கடந்த 15 நாட்களில் 16 இறாத்தலால் குறைந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியாவில் றிசாட் பதியுதீன் – முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மோதல்
Next post விக்னேஸ்வரன்- ஜெயலலிதாவிற்கு இடையில் விசேட சந்திப்பு