100 கன்னிப் பெண்களின் இரத்தம் வேண்டும்! சீனாவில் வினோத விளம்பரம்..

Read Time:2 Minute, 3 Second

china.sexpark09சீனாவில் உள்ள மருத்துவமனை ஒன்று ஆராய்ச்சிக்காக கன்னிப்பெண் இரத்தம்கேட்டு விளம்பரம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளது.

சீனாவில் உள்ள, பீகிங் பல்கலைக்கழக புற்றுநோய் மருத்துவமனை தான் இப்படி ஒரு வினோத விளம்பரம் அளித்து பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

பாலியல் உறவு மூலம் பரவும் எச்.பி.வி. என்ற வைரஸ் பற்றிய ஆராய்ச்சிக்காக இவ்வாறு கன்னிப் பெண்களின் இரத்தம் கேட்டு இணையத்தில் விளம்பரம் செய்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.

விளம்பரத்தில் 18 வயது முதல் 24 வயது வரையிலான 100 கன்னிப் பெண்களின் இரத்தம் தேவை என்று அந்த மருத்துவமனை நிர்வாகம் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘கன்னிப் பெண்களின் இரத்தம்தான் தேவையா? ஆண் பிரம்மச்சாரிகளின் இரத்தம் தேவை இல்லையா? என்ன விஞ்ஞானம் இது?‘ என விளம்பரத்தைப் பார்த்து பலர் கிண்டலோடு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அத்தோடு, இப்படி கன்னிப் பெண்களின் இரத்தத்தை கேட்டதன் மூலம், மருத்துவமனை நிர்வாகம் பெண்களை இழிவுபடுத்தி விட்டதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனராம்.

ஆனால், ‘கன்னிப் பெண்களின் இரத்தத்தில் எச்.ஐ.வி. தாக்குவதற்கு வாய்ப்பு குறைவு. அத்துடன், கன்னிப் பெண்களின் இரத்தத்தை கேட்பது சர்வதேச நடைமுறைதான். எனவேதான், இந்த கோரிக்கையை விடுத்தோம்‘ என விளக்கம் கொடுத்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியா மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு
Next post முதியவரின் உயிரைப் பறித்த காட்டு யானை