விநாயகர் ஊர்வலத்தில் பெண் போலீஸ் மானபங்கம்!

Read Time:1 Minute, 49 Second

rape-006விநாயகர் ஊர்வலத்தில் பெண் போலீஸ் மானபங்கம்: சிவசேனா எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் மீது வழக்கு
மராட்டிய மாநிலம் கோல்காபூரில் நேற்று முன் தினம் இரவு விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்து சென்றனர். ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது திடீர் என்று ஊர்வலத்தில் சென்ற சிவசேனா தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு உருவானது.

இதில் பாதுகாப்புக்கு வந்த பெண் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரை சிவசேனா தொண்டர்களும், கூட்டத்தினரும் மானபங்கம் செய்தனர். படுகாயம் அடைந்த அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் சிவசேனா எம்.எல்.ஏ. ராஜேஷ் ககிர் காகர் மற்றும் அவரது ஆட்கள் இந்த மானபங்கம் மற்றும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பெண் சப்–இன்ஸ்பெக்டரிடமும் வாக்குமூலம் பெற்றனர். அவரும் எம்.எல்.ஏ. ஆட்கள் மானபங்கம் செய்ததாக கூறினார்.

இதையடுத்து சிவசேனா எம்.எல்.ஏ. ராஜேஷ், அவரது உதவியாளர் ராகுல் பளர்டோடே, பாதுகாவலர் ஷாகு ஜிகார் உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதியவரின் உயிரைப் பறித்த காட்டு யானை
Next post பாகிஸ்தானில் 4 சகோதரிகள் தற்கொலை!