கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் யாழ். மாணவன் மீட்பு!!

Read Time:1 Minute, 59 Second

kidnaapகைகள் கட்டப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவனை மீட்டுள்ள மிரிஹான பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர்.

கனடாவிற்கு விஸா பெறுவதற்காக யாழ் நெல்லியடியிலிருந்து கொழும்புக்கு வருகைதந்த மாணவனே பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

கொழும்புக்கு வந்த அந்த மாணவனை கல்கிசைக்கு கடத்திச்சென்று மதுபானத்துடன் போதைபொருளை கலந்து கொடுத்துள்ளனர்.

மயக்கமடைந்த அவரை கஹதுடுவ, வெனிவெல்கொலவில் வீடொன்றுக்கு கொண்டுசென்று அங்கு கைகளை கட்டி தடுத்துவைத்துள்ளனர்.

அதன்பின் மாணவனின் வீட்டுக்கு தொலைபேசி மூலமாக அழைப்பை ஏற்படுத்திய சந்தேகநபர்கள் அவரை விடுவிக்க வேண்டுமாயின் 25 இலட்சம் ரூபாவை கப்பமாக தருமாறு கோரியுள்ளனார்.

அதில் 50 ஆயிரம் ரூபாவை அவ்விருவரும் பெற்றுகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மாணவின் உறவினர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட மிரிஹான பொலிஸார், அந்த மாணவனை மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர்.

அத்துடன் பாதாள உலக கோஷ்டியை சேர்ந்த மற்றுமொருவரை தேடி வலைவிரித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுழியோடியின் கெமராவை பறித்துச் சென்ற சுறா
Next post ராஜீவ் கொலை; காங்கிரஸ் பெண் பிரமுகரிடம் விசாரிக்கவில்லையென மனு