குறைந்த செலவில் ரொக்கெட்டை விண்ணுக்கு ஏவியது ஜப்பான்

Read Time:2 Minute, 8 Second

2100_Jaxaஜப்பான் விண்­வெளி நிறு­வனம் ஜக்ஸா மிகவும் அனு­கூ­ல­மான புதிய தலை­முறை விண்­வெளி ரொக்­கெட்டை முத­லா­வ­தாக ஏவி­யுள்­ளது.

எப்­சிலொன் என்ற செயற்கை நுண்­ண­றிவு கரு­வி­களை உள்­ள­டக்­கிய தொழில்­நுட்­பத்­துடன் கூடிய இந்த அதி நவீன ரொக்­கெட்டின் எடை­யா­னது முன்பு அனுப்­பப்­பட்ட ரொக்­கெட்­டு­களின் எடையின் பாதி­ய­ளவே உள்­ளது.

37 மில்­லியன் டொலர் (சுமார் 4895 மில்லியன் ரூபா) மதிப்­பி­லான இந்த அதி நவீன ரொக்கெட் ஜப்பான் விண்­வெளி நிறு­வ­னத்தால் தயா­ரிக்­கப்­பட்ட உலகின் முத­லா­வது தொலை­நோக்­கியை டெலஸ்­கோப்பை எடுத்­துச்­சென்­றது. பின்னர் பூமியின் மேலே சுமார் 1000 கிலோ­மீற்றர் தூரத்தில் அந்த விட்டு ரொக்கெட் பிரிந்­தது.

பூமியின் சுற்­று­வட்­டப்­பா­தையில் விடப்­பட்­டுள்ள இந்த ஸ்பிரிண்ட்-­ஏ-­ தொ­லை­நோக்­கி­யா­னது வெள்ளி, செவ்வாய், வியாழன் கோள்கள் பற்றி ஆராய்ந்து படம் பிடித்து அனுப்பும். இது ஆராய்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு நிறைய தக­வல்­களை தரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. மேலும் விண்­வெளி பற்­றிய அரிய தக­வல்­களை தரும் என்று நம்­பப்­ப­டு­கி­றது.

முன்பு அனுப்­பப்­பட்ட ரொக்­கெட்­டு­களை காட்­டிலும் பாதி­ய­ளவு எடை­யுள்ள செயற்கை நுண்­ண­றிவு கரு­வி­களை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த எப்­சிலொன் ரொக்­கெட்டை அனுப்ப 8 விஞ்­ஞா­னி­கள் மட்­டுமே தேவைப்­பட்­டனர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவாஷிலாந்து மன்னருக்கு 14–வது திருமணம்: 18 வயது அழகியை மணக்கிறார்
Next post ஆட்டோக்களை கொள்ளையிட்ட இருவர் கைது