சிரிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் –பான் கீ மூன்
இரசாயன ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான சிரியாவின் விண்ணப்பித்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை, சிரிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் எனவும் ஐ.நா பொது சௌலாளர் பான் கி. மூன் தெரிவித்-துள்ளார் .
சிரியா தலைநகர் டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் சென்ற மாதம் சிரிய ஜனாதிபதி படையினர் இரசாயன குண்டுகளை வீசி நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பதிலடியாக சிரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாரானது.
இந்நிலையில் சமரசத்துக்கு முன்வந்த சிரியாவின் நட்பு நாடான ரஷ்யா, சிரியாவின் இரசாயன ஆயுதங்களை சர்வதேசக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரச் செய்வதாகவும், இரசாயன ஆயுதங்கள் தடுப்பு ஒப்பந்தத்தில் சிரியாவைக் கையெழுத்திட வைப்பதாகவும் கூறியிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, இரசாயன ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஐ.நா.விடம் சிரியா விண்ணப்பித்தது.
இதுகுறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது, ‘ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், சிரியாவின் விண்ணப்பத்தை வரவேற்றுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம், சிரியாவில் இனி இரசாயனத் தாக்குதல் நடைபெறுவது தடுக்கப்படும் என்றும், சிரியாவில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு பிறக்கும் என்றும் நம்புவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் தெரிவித்தார்” என்று கூறினார்.
அமெரிக்காவில் இயங்கிவரும் தன்னார்வ அமைப்பான ‘ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கம்’ வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியாவின் இரசாயன ஆயுதங்களை ஒழிப்பது சிக்கலான காரியம் என்றாலும், இரசாயன ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் சிரியா கையெழுத்திடுவது ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும்.
அபாயகரமான ஆயுதங்களை வைத்திருப்பது, உள்நாட்டிலோ, பக்கத்து நாடுகளுக்கு எதிராகவோ அவற்றைப் பயன்படுத்துவது ஆகியவற்றிலிருந்து சிரியாவைத் தடுக்கும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் சிரியா எந்த அளவு ஒத்துழைப்பு தருகிறது என்பது, அந்நாடு தனது இரசாயன ஆயுதங்களின் இருப்பு விபரத்தைத் தருவதைப் பொறுத்தே அமையும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, ‘இஸ்ரேலின் இராணுவ பலத்துக்கு ஈடுகொடுக்கத்தான் சிரியா இரசாயன ஆயுதங்களை வைத்துள்ளது” என்று ரஷ்ய ஜனாதிபதி கூறியுள்ள கருத்து, தனது கையிருப்பிலுள்ள இரசாயன ஆயுதங்களையும் அழிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுமோ என்ற கலக்கத்தை இஸ்ரேலுக்கு ஏற்படுத் தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating