சிங்கப்பூர் அழகுராணி போட்டியில் செவிப்புலனற்ற யுவதி சாதனை (PHOTOS)
செவிப்புலனற்ற யுவதியொருவர் மிஸ் சிங்கப்பூர் அழகுராணி போட்டியில் பட்டமொன்றைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சூய் யீ ஷியா எனும் இந்த யுவதி இரு காதுகளிலும் 80 சதவீதம் கேட்கும் ஆற்றலை இழந்தவர். அண்மையில் நடைபெற்ற மிஸ் சிங்கப்பூர் அழகுராணிப் போட்டியில் பங்குபற்றிய அவர் ‘மிஸ் சிங்கப்பூர் பிரெண்ட்ஷிப் இன்டர்நெஷனல்’ அழகுராணியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவ்வருட மிஸ் சிங்கப்பூர் போட்டியில் வழங்கப்பட்ட 6 பிரதான பட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
அதேவேளை நடுவர்களாலும் அனுசரணையாளர்களாலும் தெரிவுசெய்யப்பட்டு வழங்கப்படும் 10 விருதுகளில் மிஸ் போட்டோஜெனிக் மிஸ் ஹீலிங் டச் (குணப்படுத்தும் தொடுகை)இ மிஸ் வி டென் பிளஸ் அம்பாஸ்டர் ஆகிய விருதுகளையும் வென்றதன் மூலம் இப்போட்டிகளில் அதிக விருதுகளை வென்றவரானார் சூய் யீ ஷியா.
இப்போட்டிகளில் 2013 சிங்கப்பூர் சுற்றுலா அழகுராணியாக ரஷெல் கோவும் மிஸ் சிங்கப்பூர் அனைத்து நாடுகள் அழகுராணியாக சப்ரினா நூர் அலிமும் சிங்கப்பூர் சர்வதேச மொடல் அழகுராணியாக அன்ட்ரியா சேவும் தெரிவாகினர்.
25 வயதான சூய் யீ ஷியாஇ ‘மேக் அப்’ கலைஞராகப் பணியாற்றுபவர். ‘இந்த வெற்றிகள் குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எனது கனவுகள் எந்தளவு பெரியவையானாலும் அவற்றை நனவாக்குவதை அங்கவீனம் நிறுத்தமாட்டாது என்பதை வெளிப்படுத்தி நான் எப்போதும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புபவள்’ என அவர் கூறியுள்ளார்.
‘இப்போது எனது நம்பிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. அடுத்த வருடம் மிஸ் சிங்கப்பூர் யூனிவர்ஸ் போட்டியில் பங்குபற்றுவதற்கு நான் எண்ணியுள்ளேன்’ எனவும் சூய் யீ ஷியா கூறுகிறார்.
எனினும்இ அனுதாப வாக்குகள் காரணமாக தனக்கு இவ்வெற்றிகள் கிடைத்ததாக நான் கருதவில்லை எனவும் கடின உழைப்பு மற்றும் முயற்சிகள் காரணமாகவே இவ்வெற்றி கிடைத்தாகவும் அவர் கூறுகிறார்.
‘இப்போட்டியில் நான் பங்குபற்றியமை பெரும் துணிச்சலான நடவடிக்கை எனக் கூறி எனது ஆதரவாளர்கள் பலர் என்னை உற்சாகப்படுத்தினர்.
இந்த அழகுராணி போட்டிக்காக அதிக நேரத்தையும் உறக்கத்தையும் நான் தியாகம் செய்தேன். ஆனால்இ அத்தியாகம் பெறுமதியானதாகியுள்ளது’ என சூய் யீ ஷியா தெரிவித்துள்ளார்.
4 வயதில் ஏற்பட்ட நோயொன்றினால் செவிப்புலனை இழந்தவர் சூய் யீ ஷியா. அவரை மீண்டும் பேசவைப்பதற்காக பேச்சுப் பயிற்சி நிபுணர் ஒருவரை ஷியாவின் பெற்றோர் நியமித்தனர்.
தற்போது அவரால் தெளிவாக உச்சரிக்க முடியாவிட்டாலும் ஓரிரு வார்த்தைகளை பேசக்கூடியவராக சூய் ஷியா விளங்குகிறார்.
மிஸ் சிங்கப்பூர் அழகுராணி போட்டியில் இறுதிச்சுற்றில் ‘தற்கால இளையோர் எதிர்கொள்ளும் தீவிரமான பிரச்சினை என்ன?’ என சூய் யீ ஷியாவிடம் கேட்கப்பட்டது.
ஆனால் இக்கேள்வியை அவரின் செவிகளால் அவரால் கேட்கமுடியவில்லை. ஆதனால் அக்கேள்வியை மீண்டும் கேட்குமாறு ஷியா கோரினார்.
‘எதிர்மறையான ஒரே மாதிரியான…’ எனக் கூறிய சூய் யீ ஷியா அதன்பின் ஏதோ கூறினார். ஆனால் அவரின் உச்சரிப்பு தெளிவாக இருக்கவில்லை.
‘போட்டியின் பின்னர் அவர் இது குறித்து கூறுகையில்இ ‘அக்கேள்வியை என்னால் சரியாக செவிமடுக்க முடியவில்லை. நான் மிகவும் பதற்றமாக இருந்தேன்.
அதனால் சுருக்கமான பதிலளித்தேன். நான் அதிகமாகப் பேசப் பேச அதிக தவறுகளை செய்துவிடுவேன் என கவலையடைந்தேன். அக்கேள்வி ஒரு அட்டையில் எழுதப்பட்டிருந்தால் எனக்கு வசதியாக இருந்திருக்கும்’ என்றார்.
இப்போட்டியில் பங்குபற்றிய ஏனைய 19 போட்டியாளர்களுடன் இணைந்து நடன ஒத்திகையில் ஈடுபட்டவேளையிலும் இசையை முறையாக கேட்க முடியாததால அவர் அசௌகரியமடைந்தார்.
‘நடன ஒத்திகையின்போதும் நீச்சலுடையில் போஸ் கொடுக்கும்போதும் பிரச்சினைகளை எதிர்கொண்டேன். ஓத்திகைகளின்போது நான் பல தவறுகளைப் புரிந்தேன். இறுதிப் போட்டிக்காக கடினமாக பயிற்சிபெற நேரிட்டது.’ என அவர் கூறினார்.
இப்போட்டியின் நடுவர்களில் ஒருவரான சட்டத்தரணி சாமுவேல் சியோவ் கருத்துத் தெரிவிக்கையில் ஒட்டுமொத்தமாக சூய் யீ ஷியா சிறப்பாக செயற்பட்டுள்ளார் என்றார்.
‘கேள்வி நேரத்தில் சூய் யீ ஷியா சரியாக பதிலளிக்காததால் ஏனைய போட்டியாளர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்பதற்காக அவருக்கு நான் குறைந்த புள்ளிகளையே வழங்கினேன். ஆனால் ஏனையோரைப் போன்று அவர் நடந்தார்.
அவரின் நடனம் அவ்வளவு மோசமாக இருக்கவில்லை. அவர் செவிப்புலன் ஆற்றலை இழந்தவர் என எவரும் என்னிடம் கூறியிருக்காவிட்டால் அதை நான் உணர்திருக்க மாட்டேன். அவர் அனுதாப வாக்குகளால் வெற்றி பெறவில்லை. அவர் சிறப்பாக செயற்பட்டார்’ எனத் தெரிவித்துள்ளார்.
Average Rating