நோர்வேயில் புலிகளின் பிஸ்டல் குழுவினர் புலி எதிர்ப்பாளருக்கு எச்சரிக்கை
நோர்வேயில் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களும் இயக்கப் பிரதிநிதிகளும் மேற்கொண்டுவரும் பலாத்காரமான நிதிசேகரிப்பு நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கான நோர்வே நாட்டுப் பொலிஸ் துறையினர் புலிகள் இயக்கம் சார்ந்தவர்கள் மீது எந்த விதமான சட்ட நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை என்று நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வசித்துவரும் ராஜசிங்கம் சிவராஜா என்பவர் தெரிவித்துள்ளார். தமிழ் ஈழம் மாணவர் அமைப்பின் பிரபலமான உறுப்பினராக (TESO) இருந்து சிறீPலங்காவில் செயற்பட்ட இவர் புலிகள் இயக்கத்தினரின் அச்சுறுத்தல்களிலிருந்தும் கொலைத் தாக்குதல் எச்சரிக்கைகள் காரணமாக புலிகள் அமைப்பினரிடமிருந்து தப்புவதற்காக நோர்வே நாட்டுக்கு வந்து அரசியல் புகலிடம் கோரியுள்ளார்.
நோர்வேயில் புலிகள் இயக்கத்தினர் மேற்கொண்டுவரும் இந்தச் சட்டவிரோதமான நிதிசேகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக பல தமிழர்கள் எதிர்ப்புக்குரல் கிளப்பியுள்ளனர் எனவும் அவர்களில் சிவராஜாவும் ஒரு முன்னணியிலுள்ள ஒரு புலிகள் இயக்க எதிர்ப்பாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தலைநகர் ஒஸ்லோவில் நகர மண்டப பகுதிக்கு அண்மையில் வைத்து மேற்படி சிவராஜாவுக்குப் புலிகள் இயக்கத்தின் பிஸ்டல் குழுவினர் ஒருவர் இவ்வாறான புலிகள் இயக்கத்திற்கு எதிரான செயற்பாடுகள் பேச்சுகளை நிறுத்தாவிட்டால் சுட்டுக்கொல்லப்போவதாக நேரடியாகவே கொலை அச்சுறுத்தலை விட்டிருந்தார்.
மேற்படி சிவராஜாவைப் போலவே நோர்வேயில் புலிகள் இயக்கத்தினரின் நடவடிக்கைகளுக்கு எதிராக பகிரங்கமாகச் செயற்பட்டு வந்த சத்தியராஜன் என்பவரை முன்னர் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த குழுவினர் வாகனம் ஒன்றினால் மோதிக் கொலை செய்திருந்தனர். இவ்வாறு நோர்வேயில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படும் மக்களில் முன்னணியில் உள்ளவர்களைக் கொலை செயற்வதற்காக புலிகள் இயக்கம் சார்ந்த குழுவொன்று நோர்வேயில் இயங்குவது குறித்து மேற்படி சிவராஜா என்பவர் ஏற்கனவே நோர்வே பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோருக்கும் முறைப்பாடு செய்து மகஜர்களைக் கொடுத்திருந்தார். ஆயினும் அவருடைய அந்த முறைப்பாடுகள் குறித்து எந்த நடவடிக்கையும் உரிய நோர்வே அரசியல்வாதிகள் அதிகாரிகளால் எடுக்கப்படாத நிலையில் சிவராஜாவின் முயற்சிகள் பயனளிக்கவில்லை.
நோர்வேயில் வசிக்கும் தமிழ் மக்கள் தமது உறவினர்களைப் பார்ப்பதற்காக சிறீPலங்காவுக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் குறித்த தமிழர்கள் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மேலதிக நிதிகளை வழங்க வேண்டும் என்ற நடைமுறையின் கீழ் புலிகள் இயக்கத்தின் பேரில் நிதிகளை வைப்புச் செய்த நோர்வே நாட்டுத் தமிழர்களுக்கு நான்கு எண்களைக் கொண்ட குறிப்பு இலக்கமும் இரகசிய சொற்களும் அடங்கிய கடிதங்கள் வழங்கப்படுவதாகவும் இவ்வாறான இரகசியக் கடிதங்களை நோர்வேயிலுள்ள புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிகளே புலிகள் இயக்கத்திடமிருந்து பெற்று மேற்படி நிதி வழங்கிய தமிழர்களுக்கு நேரடியாகக் கொடுப்பதாகவும் அந்தக் கடிதங்களில் குறித்த இரகசிய இலக்கம் சொற்களுடன் “என்” (N) என்ற ஆங்கில எழுத்து முதலில் குறிக்கப்பட்டிருக்கும் எனவும் ஒஸ்லோ தமிழர் தரப்பு தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு நோர்வேயில் புலிகள் இயக்கத்துக்கு நிதிவழங்கிய தமிழர்கள் சிறீலங்காவுக்கு வந்து ஏ-9 பாதையில் பயணம் செய்யும்போது அவர்களிடம் புலிகள் இயக்கத்தின் வரிகள் அறவிடுவதில்லை. அத்துடன் அவர்களைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்யும்போது மேற்படி இரகசிய இலக்க கடிதத்தைக் காட்டி விசாரணை செய்யப்பட்டதாக அவர்களிடமிருந்து அனுமதிக் கடிதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நோர்வே தமிழர்கள் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. Thanks….THENEE.COM