ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த இராணுவத்தை பயன்படுத்த முடியுமா?

Read Time:2 Minute, 1 Second

weliweriya8-பொதுமக்களது ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தை பயன்படுத்துவது தொடர்பில் சட்ட ரீதியான விடயங்களை ஆராய நியமிக்கப்பட்ட குழு அறிக்கை தயாரித்துள்ளது.

பொதுமக்களது ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தை பயன்படுத்துதல் தொடர்பில் உள்ள சட்ட ரீதியான விடயங்களை ஆராய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விசேட குழு ஒன்றை நியமித்தது.

இக் குழுவினர் தயாரித்த அறிக்கை தொடர்பில் விசேட அறிவித்தலை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எதிர்வரும் சில தினங்களில் வெளியிடவுள்ளது.

ரத்துபஸ்வல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தின்போது இராணுவத்தை பயன்படுத்திய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எவ்வாறாயினும் பொது மக்களது ஆர்ப்பாட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இராணுவத்தினரை பயன்படுத்துவது சரியான நடவடிக்கை அல்ல என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் மூவர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் இராணுவ அதிகாரிகள் நால்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 13 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 16 வயது சிறுவன் கைது
Next post தேர்தல் கூட்டத்தில் கட்டப்பட்ட ஒலி பெருக்கிகள் விசமிகளால் அடித்துடைப்பு