23 வருடங்களின் பின்னர் யாழ்.தேவி புகையிரத சேவை.. (படங்கள் இணைப்பு)

Read Time:4 Minute, 17 Second

005வவுனியா ஒமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையான யாழ்.தேவி புகையிரத சேவையை 23 ஆண்டுகளின் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாக தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சிக்கு இன்றைய தினம் (14) விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அவர்கள் வவுனியா ஒமந்தை புனரமைக்கப்பட்ட ரயில்பாதையூடாக வடபகுதிக்கான புகையிரத சேவையை ஆரம்பித்து வைத்தார்.

இலங்கையின் தெற்கிலிருந்து வடக்கிற்காக உறவுப்பாலமாக விளங்கிய யாழ்.தேவி ரயில் சேவையானது 1956 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு சிறப்பான சேவையினை ஆற்றிவந்த நிலையில் 1990 ம் ஆண்டு யூன் 12 ம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வவுனியாவுடன் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

மன்னார் மதவாச்சி தொடக்கம் – மடுவரையான ரயில்பாதை கடந்த மேமாதம் 14 ம் திகதி திறந்து வைக்கப்பட்ட அதேவேளை, ஒமந்தை தொடக்கம் கிளிநொச்சி வரையான ரயில்பாதைக்கான புனரமைப்புப் பணிகளை 2011 ம் ஆண்டு மார்ச்மாதம் 29 ம் திகதி இர்கொன் நிறுவனம் தொடங்கியிருந்தது.

இப்புனரமைப்புத்திட்டத்தினை ஒமந்தை – கிளிநொச்சி, மடு – தலைமன்னார், மதவாச்சி – மடு, பளை – காங்கேசன்துறை என கட்டங்களாக மேற்கொண்டு வரும் நிலையில் இதற்காக 800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் சமிக்ஞை மற்றும் தொடர்பாடலுக்கு 86.50 மில்லியன் அமெரிக்க டொலர்களும், இயந்திரங்கள் உபகரணங்களுக்கு 146.51 மில்லியன் அமெரிக்க டொலர்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 5 ம் திகதி ஒமந்தை தொடக்கம் கிளிநொச்சி வரையான 63 கிலோ மீற்றர் தூரத்தை உத்தியோகபூர்வமாக 44 நிமிடங்களில் ரயில் ஒட்டம் பரீட்சார்த்தமாக இடம்பெற்றிருந்தது.

23 வருடங்களுக்குப் பிறகு இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஒமந்தை முதல் கிளிநொச்சி வரையான ரயில்பாதை மணிக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து கிளிநொச்சி வரையான 328 கிலோமீற்றர் தூரத்தை சுமார் 5 அல்லது 7 மணிநேரத்திற்குள் பயணிக்க முடியும்.

இந்நிலையில் ஒமந்தை புகையிரத நிலையங்கள் சிங்கர் கம்பனி அனுசரணையிலும், கிளிநொச்சி புகையிரத நிலையம் கொமர்சல் வங்கி அனுசரணையிலும் புனரமைக்கப்பட்டுள்ளன.

இதன்மூலமாக நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு பெரும்பங்காற்றும் என்பதுடன், வடக்கின் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுகளில் அமைச்சர்களான குமார் வெல்கம, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திஸ்ஸகரலியத்த உட்பட பிரதியமைச்சர்கள், ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.கே.சிங்ஹா, வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்மின்னல் (1)
யாழ்மின்னல் (2)
யாழ்மின்னல் (3)
யாழ்மின்னல் (4)
யாழ்மின்னல் (5)
யாழ்மின்னல் (6)
யாழ்மின்னல் (7)
யாழ்மின்னல் (8)
யாழ்மின்னல் (9)
யாழ்மின்னல் (10)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2014 கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறப்போகும் சில சுவாரஸ்ய சாதனைகள்! (VIDEO & PHOTOS)
Next post காரைநகரில் சிவாஜிலிங்கம் ராணுவத்தால் தடுத்து வைப்பு