பகிஸ்கரிக்குமாறு பிரித்தானியா கோரிக்கை

Read Time:1 Minute, 53 Second

uk.Commonwealth_Flagsஎதிர்வரும் நொவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களது உச்சி மாநாட்டை பிரித்தானியா பகிஸ்கரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று பிரித்தானியா பொதுச்சபை அமர்வின் போது, பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

இந்த கோரிக்கையை நிராகரித்து உரையாற்றிய, பிரித்தானிய வெளிவிகார மற்றும் பொதுநலவாய ராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வாயா, இந்த உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்வதற்கான உரிமையினை பிரித்தானியா கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

எப்படியிருப்பினும், ட்ரினிடாட் மற்றும் டுபோக்கோ ஆகிய நகரங்களில் இடம் பெற்ற பொதுநலவாய மாநாட்டின் போது, இலங்கைக்கு பதிலாக அவுஸ்திரேலியாவின் நடாத்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அந்த வேளை 2013 ஆம் ஆண்டு இலங்கையில் பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடாத்தப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருந்ததாக பிரித்தானிய வெளிவிகார மற்றும் பொதுநலவாய ராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வாயா, தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரு பெண் இராணுவத்தினரைக் காணவில்லை
Next post பிகினி உடையில் சென்ற கர்ப்பிணி பெண்..