உலகில் உயிர்வாழும் வயதான நபராக எதியோப்பிய விவசாயி

Read Time:2 Minute, 13 Second

Questionஎதி­யோப்­பி­யாவைச் சேர்ந்த விவ­சா­யி­யொ­ருவர் தனது வயது 160 எனவும், தானே உலகின் மிகவும் வய­தா­னவர் எனவும் உரிமை கோரி­யுள்ளார்.

1895 ஆம் ஆண்டு எதி­யோப்­பி­யாவில் இத்­தாலி தலை­யீடு செய்தமை தொடர்பில் தனக்கு ஞாப­கத்தில் உள்­ள­தாக ஓய்வுபெற்ற விவ­சா­யி­யான எட­கபோ எப்பா தெரி­வித்துள்ளார்.

எனினும் அவ­ரிடம் தனது வயதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு எந்­த­வொரு ஆவ­ணமும் இருக்­க­வில்லை.

அவர் ஒரோ­மியா தொலைக்­காட்­சிக்கு அளித்த பேட்­டியின் போது, 19 ஆம் நூற்­றாண்டில் இடம்பெற்ற சம்­ப­வங்­களை விப­ரித்­துள்ளார். இத்­தா­லியால் எதி­யோப்­பியா ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­ட­ போது, தான் இரு மனை­விகள் மற்றும் மக­னுடன் வாழ்ந்து கொண்­டி­ருந்­தாக அவர் கூறியுள்ளார்.

அவர் கூறு­வது உண்­மை­யானால் உலக வர­லாற்றுப் பதிவில் நீண்ட காலம் வாழ்ந்த நப­ராக அவர் இடம்பிடிப்பார், இதவரை உலக வர­லாற்றில் அதி­க ­காலம் உயிர் வாழ்ந்த நப­ராக பிரெஞ்சு பெண்­ம­ணி­யான ஜீன் கல்மென்ட் உள்ளார். அவர் 1997 ஆம் ஆண்டு தனது 122 ஆவது வயதில் மர­ண­மானார்.

எழுதப் படிக்கத் தெரி­யாத சமூ­கத்தை சேர்ந்த எப்­பாவின் வயதை உறு­திப்­ப­டுத்தக் கூடிய எவ­ருமே உயி­ருடன் இல்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அவ­ரது வயது உறு­திப்­ப­டுத்­தப்­படும் பட்­சத்தில், அவர் உலகில் உயிர்­வாழும் அதிவய­தா­ன­வ­ராக கின்னஸ் உலக சாதனைப் புத்­த­கத்தில் இடம்பிடிப்பார். தற்போது உலகில் உயிர் வாழும் அதிக வயதானவராக 115 வயதான மிஸவோ ஒகவா விளங்குகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான்கு பேரில் ஒரு ஆண், பெண்களுக்கு எதிரான வன்முறை -ஐ.நா
Next post கயிற்றின் மீது வேக­மாக நடந்து உல­க­சா­தனை படைத்த நாய்