நான்கு பேரில் ஒரு ஆண், பெண்களுக்கு எதிரான வன்முறை -ஐ.நா

Read Time:2 Minute, 35 Second

woman-005ஆசியாவில் நான்கில் ஒரு ஆண், பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டுள்ளமை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்றில் மூலம் தெரியவந்துள்ளது.

குறைந்தது ஒரு பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதை இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உறவுகளுக்கு இடையிலான பாலியல் பலாத்காரம் பொதுவான ஓர் விடயமாக காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், பத்தில் ஒரு ஆண் மனைவி அல்லாத ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு ஆசிய நாடுகளின் ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எவ்வாறு பரவியுள்ளது மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து பன்னாட்டு ஆய்வு முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதை ஏற்றுக்கொண்ட அரைவாசிக்கும் அதிகமானவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.

பாலியல் பலாத்கார பாதிப்பு வீதம் நாடுகளுக்கு நாடு வேறுபடுவதாகவும் ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவு பாலியல் பலாத்காரம் இடம்பெறும் நாடாக பப்புவான நியூகினி பதிவாகியுள்ளதுடன், இந்தோனேஷியா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

பப்புவா நியூகினியா போகன்வில் தீவு – 62வீதம்
இந்தோனேஷியா பப்புவா மாகாணம் – 48.6வீதம்
இந்தோனேஷியா நகர் பகுதி – 26.2மவீதம்
சீனா நகர்ஃகிராம பகுதி – 22.2மவீதம்
கம்போடியா – 20.4மவீதம்
இந்தோனேஷியா கிராம பகுதி – 19.5வீதம்
இலங்கை – 14.5மவீதம்
பங்களாதேஷ் கிராம பகுதி – 14.1வீதம்
பங்களாதேஷ் நகர் பகுதி – 9.5வீதம்
தகவல் – ஐ.நா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 15 வயது காதலி 18 வயது காதலனால் பாலியல் துஷ்பிரயோகம்
Next post உலகில் உயிர்வாழும் வயதான நபராக எதியோப்பிய விவசாயி