(VIDEO) கொலம்பியாவில் 2 கிலோ போதைப் பொருளை வயிற்றில் மறைத்து கடத்த முயன்ற கனடா பெண் கைது

Read Time:2 Minute, 6 Second

027கொலம்பியா தலைநகர் பொகோடோ விமான நிலையத்திலிருந்து கனடா டொராண்டோ நகருக்கு செல்ல ஒரு இளம் பெண் வந்திருந்தார்.

கர்ப்பிணியாக தோற்றத்தில் இருந்த அந்த கனடா பெண்ணிடம் விமானநிலைய சுங்க இலாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரின் வருகை குறித்த விவரங்களுடன் சோதித்தனர்.

அபோது நீங்கள் ஆகஸ்ட் மாதம் கொலம்பியா வந்து சேர்ந்துள்ளீர்கள். அதற்குள் எத்தனை மாதம் கற்பமடைந்தீர்கள் என்று கேள்வி கேட்டனர். அதற்கு இதுபோன்ற கேள்விகளை நான் விரும்பவில்லை என்று கோபமாக பதிலளித்துள்ளார்.

இதனால், ஒரு பெண் அதிகாரியின் மூலம் அவரது வயிற்றை சோதித்துள்ளனர். அப்போது வயிறு மிகவும் கடினமாகவும் குளிராகவும் இருந்துள்ளது.

இதையடுத்து அவர் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது 60 ஆயிரம் டாலர் மதிப்புடைய 2 கிலோ எடையுள்ள கொகைன் போதைப்பொருளை ரப்பர் மரத்தின் பால் பசையால் வயிற்றில் ஒட்டி கடத்த முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 5 முதல் 8 வருட சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டு விமானநிலையம் வழியாக போதைப்பொருளை கடத்த முயன்றதாக 150 வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன. கடத்தலில் ஈடுபட்ட 874 வெளிநாட்டுக்காரர்கள் கொலம்பிய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி முஷாரப் மனு
Next post புலிகளின் எழிலன் குறித்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க உத்தரவு