இளவரசி டயானாவின் மரணம் குறித்து வெளிவரும் புதிய அதிர்ச்சித் தகவல்கள்..!!
இளவரசர் சார்ள்ஸிடமிருந்து விவாகரத்து பெற்றபின், எகிப்திய கோடீஸ்வரர் மொஹமட் அல் பயாட்டின் மகனான டோடி அல் பயாட்டை டயானா திருமணம் செய்வதை பிரித்தானிய அரச குடும்பத்தினர் விரும்பவில்லை எனவும் அதனால், எம்.ஐ.6 எனும் பிரித்தானிய வெளிநாட்டு புலனாய்வு அமைப்பின் மூலம் டயானா கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்களும் கதைகளும் நீண்டகாலமாக உள்ளன.
எனினும், டயானாவும் டோடி யும் பயணம் செய்த கார் பாரிஸ் நகர சுரங்கப் பாதையொன்றின் தூணில் மோதியமை ஒரு விபத்துதான் என டயானாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திய பிரித்தானிய, பிரெஞ்சு புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. 2008 ஆம் ஆண்டு பிரித்தானிய நீதிமன்றமொன்றும் இதே தீர்ப்பை அளித்தது.
மேற்படி காரின் சாரதியான ஹென்ரி போல், மது அருந்தியிருந்ததாகவும் பாப்பராஸிகள் துரத்திவந்த நிலையில் அவர் மிக வேகமாகக் காரை செலுத்தியதால் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்ததாகக் கூறப்பட்டது.
ஆனால், பிரித்தானிய இராணுவத்தின் விசேட வான் சேவைப் பிரிவு (எஸ்.ஏ.எஸ்.) பிரிவினால் டயானா கொல்லப்பட்டதாக அப்படைப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் கூறிய தகவல் கடந்த மாதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், டயானாவின் மரணம் விபத்தல்ல அவரை கொல்ல சதி நடந்திருக்கலாம் என தனது ஆய்வுகள் தெரிவிப்பதாக சூ றீட் எனும் புலனாய்வு ஊடகவியலாளர் ஒருவர் எழுதிய கட்டுரையொன்றில் தெரிவித்துள்ளார்.
ஆனால், பாரிஸிலுள்ள, அல் பயாத் குடும்பத்துக்குச் சொந்தமான ரிட்ஸ் ஹேட்டலிலிருந்து டயானாவும் டோடியும் வெளியேறும்போது அவர்களை பின்தொடர்ந்து படம்பிடிப்பதற்காக பாப்பராஸிகள் எனும் புகைப்படப்பிடிப்பாளர்கள் காத்திருந்தனர்.
ஹோட்டலுக்கு முன்னால் ஒரு மேர்சிடிஸ் பென்ஸ் காரை நிறுத்திவைத்து பாப்பராஸிகளுக்கு பாசாங்கு காட்டிவிட்டு, ஹோட்டலின் பின்வாசல் வழியாக டயானாவும் டோடியும் அவரின் மெய்ப்பாதுகாவலரும் சாரதியும்மற்றொரு கறுப்பு நிற மேர்சிடிஸ் காரில் சென்றனர்.
ஆனால் அதை அவதானித்துவிட்ட சில பாப்பராஸிகள் அக்காரை துரத்திச் சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது என்று சூ றீட் எனும் புலனாய்வு ஊடகவியலாளர் ஒருவர் எழுதிய கட்டுரையொன்றில் தெரிவித்துள்ளார்.
ஆனால், அச்சுரங்கப் பாதை யில் மோட்டார் சைக்கிள் மாத்திரமல்லாமல் வெள்ளை நிற பியன் யுனொ ரக கார் ஒன்றும் நீல நிற சலூன் ரக காரும் டோடி, டயானாவின் மேர்சிடிஸ் காரை துரத்திச் சென்றதாக சுயாதீன விசாரணைகள் தெரிவிக்கின்ற என சூ றீட் தெரிவித்துள்ளார்.
‘நீல நிற கார், டோடியின் மேர்சிடிஸ் காரை மிக நெருங்கிச் சென்றது. அது பாப்பராஸியின் கார் என தவறாக நினைத்த டோடியின் சாரதி ஹென்ரி போல், இன்னும் வேகமாக காரை செலுத்த அது தூண்டியது.
அதேவேளை, வெள்ளை நிற கார் வேகமெடுத்து டோடியின் மேர்சிடிஸ் காரின் பக்கமாக வெட்டித் திருப்பியது. இதனால் வீதியின் ஒரு பக்கத்திற்கு மேர்சிடிஸ் கார் தள்ள நிர்ப்பந்திக்கப்பட்டது. இதன்மூலம் இருவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளொன்று டோடியின் காரை முந்திச் செல்ல வாய்ப்பு கிடைத்தது.
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவரும் தமது முகம் தெரியாத வகையில் தலைக்கவசம் அணிந்திருந்தனர். டோடியின் மெர்சிடிஸ் காரிலிருந்து 15 அடி தூரத்திற்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, அதில் பின்னாளிலிருந்து பயணம் செய்தவர் கடுமையான ஃபிளேஷ் வெளிச்சத்தை டோடி யின் காரை நோக்கிப் பாய்ச்சியடித்தார். லேசர் வெளிச்சக் கருவியொன்றின் மூலம் இந்த வெளிச்சம் பாய்ச்சப்பட்டதாக கருதப்படுகிறது.
இந்த கடுமையான வெளிச்சம் காரணமாக டோடியின் சாரதி ஹென்ரி போல் தற்காலிகமாக குருடாகும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அதன்பின் மேர்சிடிஸ் கார் பயங்கரமாக திரும்பி சுரங்கப்பாதையின் தூணில் மோதும் சத்தம் கேட்டது’ என சாட்சிகள் கூறியதாக சூ றிட் தெரிவித்துள்ளார்.
இவ்விபத்துக் காட்சியை அவ்வழியே வாகனத்தில் பயணம் செய்த பிரெஞ்சு துறைமுக விமானியாக பணியாற்றிய ஒரு வர் வாகனத்தின் கண்ணாடி வழியாக அவதானித்துள்ளார்.
மேற்படி மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் விபத்தின் பின்னர் இறங்கி, அக்காரின் கண்ணாடிகளுக்கூடாக பார்த்ததாகவும் பின்னர் அவர் தனது கைகளை மார்புக்கு குறுக்காக கொண்டு சென்று கீழ் நோக்கி இறக்கி விரித்து தனது சகாவுக்கு சமிக்ஞை காட்டியதாக அவ்விமானி தெரிவித்தாராம்.
இது திட்டம் வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டது என்பதை வெளிப்படுத்துவதற்காக படையினர் பயன்படுத்தும் சமிக்ஞை பாணியிலானது எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன்பின் மேற்படி மோட்டார் சைக்கிள் அச்சுரங்கப் பாதையிலிருந்து வெளியேறிவிட்டதாம்.
தனது மனைவியுடன் காரில் பயணம் செய்த மேற்படி விமானி, இக்காட்சியானது ‘பயங்கரவாதத் தாக்குதல்’ போன்று இருந்ததாக வர்ணித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளின் பின் னால் அமர்ந்து சென்றவர் டோடியின் காரை விபத்துக்குள்ளாக்குவதற்
டயானா இறந்த பின்னர் எம்.ஐ. 16 புலனாய்வு அமைப் பைச் சேர்ந்த இருவரின் பெயர் குறிப்பிட்டு தனக்கு ஒரு குறிப்பொன்று அனுப்பப்பட்டதாகவும் அதில் உங்களுக்கு துணிச்சல் இருந்தால் அவர்கள் இருவரையும் பற்றி ஆழமாக அறிந்துகொள்ளுங்கள்.
இவர்களை எக்ஸ், வை எனக் குறிப்பிடும் சூ றீட் இவ்விரு நபர்களுக்கும் பின்னர் சிரேஷ்ட ராஜதந்திர பதவிகள் வழங்கப்பட்டதாக கூறியுள்ளார்.
பாரிஸில் செயற்பட்ட எம்.ஐ. 16 அமைப்பு டயானாவின் மரணத்துடன் சம்பந் தப்பட்டது என்பதற்கு கையெழுத்திடப்படாத ஒரு குறிப்பொன்று உறுதியான ஆதாரமாக அமையாது.
ஆனால், அப்புலனாய்வு அமைப்பு வட்டாரத்திலிருந்து தனக்கு மீண்டும் தொலைபேசி அழைப்பொன்று கிடைத்தது’ என்கிறார் சூ றீட். அந்த அழைப்பிலும் மேற்படி எக்ஸ், வை நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டதாக றீட் கூறுகிறார்.
எனினும், டோடி அல் பயாட் டயானாவுக்குப் பொருத்தமற்ற துணை என கருதப்பட்டதால் டயானாவை பயமுறுத்துவதற்கே திட்டம் வகுப்பட்டது என அவ்வட்டாரம் தெரிவித்ததாம்.
‘டயானாவின் கையை உடைப்பதற்கு அல்லது சிறிய காயமொன்றை ஏற்படுத்துவதற்கே நாம் எண்ணியிருந்தோம். இந்த நடவடிக்கை எம்.ஐ.6 அமைப்பிலுள்ள உயர்ந்த மனிதர் என அறியப்பட்ட உயர் அதிகாரியினால் மேற்பார்வையிடப்பட்டது.
ஆனால் அத்திட்டம் பிழைத்துவிட்டது என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஏம்.ஐ.6 அமைப்பிலுள்ள எவரும் டயானா கொல்லப்பட வேண்டுமென விரும்பவில்லை’ என அவ்வட்டாரம் தெரிவித்ததாம்.
பிரெஞ்சு புலனாய்வு அமைப்புகளுக்கும் தெரியாமல் எம்.ஐ. 6 புலனாய்வாளர்கள் அன்றிரவு பாரிஸில் இரகசியமாக செயற்பட்டதாகவும் எந்தத் தடயமும் இன்றி ‘வேலையை’ அவர்கள் முடித்ததாகவும் தனக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறும் சூ றீட்,
Average Rating