ஒரு தடவை மாத்திரம் பாலியல் உறவு கொள்ளும் செயலுக்கு உடன்பட மாட்டேன்: அசின்..!!
பொலிவூட்டில் அசின் நடித்த 6 படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் 5 படங்கள் 100 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் வசூல்குவித்து வெற்றிபெற்றன.
காவலனுக்குப் பின்னர் அசின் நடித்த தமிழ் படங்கள் எதுவும் வரவில்லை. ‘பொலிவூட் திரைப்படத்துறை, தனது திருமணம் குறித்த வதந்திகள், காதல் குறித்த தனது கருத்து முதலானவை குறித்து அசின் அளித்த செவ்வி இது:
கோடி ரூபா வசூலாகும் படத்தில் நடிக்கும் நடிகை நீங்கள். ஆனால் இன்னும் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கவில்லையே?
ஆம். ஆனால் நான் ஷாருக் கானை பார்த்துக்கொண்டே வளர்ந்தேன். பாடசாலையில் படிக்கும் காலத்தில் பிக்னிக் சென்று திரும்பியபோது பஸ்ஸில் ‘குச் குச் ஹோட்டா ஹை’ படம் காண்பித்தார்கள். நாம் வீட்டை அடைந்த போதிலும் பஸ்ஸைவிட்டு இறங்க நான் விரும்பவில்லை.
ஷாருக், யாஸ் ராஜ் பிலிம்ஸ், கரன் ஜோஹர் போன்ற பெயர்கள் இந்திப் படங்களுடன் தொடர்புபட்டவை. அவர்களுடன் நான் பணியாற்ற விரும்புகிறேன். ஆனால், சரியான படம் அமைய வேண்டும். ஒரு வருடத்தில் எத்தனை படம் என்பது முக்கியமல்ல. கலைத் திருப்திதான் முக்கியம்.
ரன்பீர் கபூர், இம்ரான் கான், ரன்வீர் சிங் போன்ற இளம் நடிகர்களுடனும் நீங்கள் இன்னும் நடிக்கவில்லை?
சரியான படம் அமையும் என நம்புகிறேன்.
அவர்கள் எனது வயதை ஒத்தவர்களாகவும் இளமையும் துடிப்பும் நிறைந்தவர்களாகவும் இருப்பர். அவர்களுடன் பணியாற்றுவது வேடிக்கையும் சுவாரஷ்யமுமாக இருக்குமென நம்புகிறேன்.
இந்த துறையில், சினிமா துறையில் நடிகைகள் இருவர் நட்பாக இருப்பதில்லை எனக் கூறப்படுகிறதே? நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
நான் சோனம் கபூர், ஜக்குலின் பெர்னாண்டஸ் போன்றோருடன் அடிக்கடி தொடர்பில் இருக்கிறேன். நட்பு என்ற பதம் பொருத்தமானதா என்று எனக்குத் தெரியாவிட்டாலும், தேவையேற்பட்டால், அமீர் கான், சல்மான் கான், அக் ஷய் குமார் ஆகியோரின் வீடுகளுக்கு நான் தொலைபேசி அழைப்பு விடுக்க முடியும். அவர்களுடன் சிறந்த தொழிற்சார் உறவை பேணுகிறேன்.
இந்த துறையில் முன்னேறுவதற்கு போய் பிரெண்ட் வைத்திருப்பது அவசியமா?
போய் பிரெண்ட் எவரும் இல்லாமலே முன்னேறியிருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த இன்டஸ்ட்ரியில் தொடர்புகளோ முறையான பயிற்சியோ இல்லாமல்தான் நான் வந்தேன்.
தெற்கிலிருந்து வடக்கிற்கு மாறுவது இலகுவாக இருக்கவில்லை. அதற்கு பல எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
தனியான ஒரு யுவதி இத்துறையில் தாக்குப்பிடிப்பது எந்தளவு கடினமானது?
வேறு எந்தத் துறையிலும் தொழில் சிந்தனையுள்ள ஒரு யுவதிக்கு ஏற்படுவதைப் போன்ற கஷ்டம் அல்லது சுலபம் போன்றதுதான் இதுவும்.
திரைப்படத்துறை என்பதனால் ஒரு யுவதி எதிர்நோக்கும் பிரச்சினைகள், அழுத்தங்கள் வித்தியாசப்படுவதில்லை. எனது குடும்பத்தின் உதவி இருக்கும் வரைக்கும் எனக்கு நல்லது. எனது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது எனது பெற்றோருக்குத் தெரியும். அவர்களுக்கு மாத்திரமே நான் விளக்கமளிக்க வேண்டும்.
முதன் முதலாக யார் மீது உங்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது?
நான் இலகுவாக யாரிடமும் வசப்படுவதில்லை. எனது பதின்மர் பருவத்தில் அப்படியான விடயங்கள் எதுவும் எனக்கு இருக்கவில்லை.
உங்கள் முதல் டேட்டிங் நினைவில் உள்ளதா?
நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். ஆனால் எனது முதல் டேட்டிங் சந்திப்பு 25 வயதை கடந்த பின்னர்தான் நிகழ்ந்தது. அதுவும் திட்டமிடப்பட்டதொன்றல்ல. அந்த நிகழ்வுக்கு ஏனைய நண்பர்கள் வராமல்போய்விட்டார்கள், அவ்வளவுதான்.
உங்களுக்கு எப்போதேனும் போய் பிரெண்ட் ஒருவர் இருந்தாரா?
இல்லை
உண்மையாகவா?
எனக்கு ஏற்ற, என்னை புரிந்துகொள்ளக்கூடிய ஒருவரை நான் கண்டுபிடிக்க வேண்டும். நான் இன்னும் ஒருவரை தேட ஆரம்பிக்கவே இல்லை. எனது வயதையொத்த இளைஞர்கள் உள்ள சூழலிலிலும் நான் இல்லை. நான் ஒருபோதும் டேட்டிங் போகவில்லை.
அதை அனுமதிக்கும் பின்னணியிலிருந்து நான் வரவுமில்லை. மும்பை, டில்லியிலுள்ளவர்களுக்கு இதை விளக்குவது கடினம். ஆனால் தெற்கிலுள்ளவர்கள் இதை புரிந்துகொள்வார்கள்.
அப்படியானால் உங்கள் திருமணம் குறித்த கதைகள் எங்கிருந்து வருகின்றன.?
அது அபத்தமானது. எனது பிள்ளைப்பராய நண்பர்கள் உலகின் வேறு பாகங்களில் இருக்கிறார்கள்.
நாம் புதுவருடத்தில் அமெரிக்காவில் சந்திப்பதற்கு திட்டமிட்டோம். ஆனால் நான் திரும்பி வந்தபோது, நான் போய் பிரெண்டை சந்திப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றதாக சொல்லப்படும் வதந்திகளை கேள்விப்பட்டேன்.
ஆரம்பத்தில் அவற்றை புறக்கணிக்க முயன்றாலும் அவர்கள் நிறுத்தவில்லை. எனவே நான் விளக்கமளிக்க வேண்டியிருந்தது.
நெருப்பில்லாமல் புகை வராதே?
(சிரிக்கிறார்). இங்கு புகைக்கும் இயந்திரங்கள் உள்ளன. அவற்றில் நெருப்பில்லாமல் புகை வரும்.
கேள்வி: அறிமுகமில்லாதவர்களுடன் ஒருநாள் மாத்திரம் பாலியல் உறவு கொள்வது (வன் நைட் ஸ்டன்ட்) குறித்து உங்கள் கருத்து என்ன?
ஒருபோதும் அந்த வன் நைட் ஸ்டன்ட்டுக்கு நான் உடன்பட மாட்டேன். நான் முற்றிலும் உடல் கவர்ச்சியின் அல்லது தற்காலிக திருப்தியின் அடிப்படையில் செயற்படுவதில்லை.
எந்த உறவு முறையும் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும். ஏனவே அந்த எண்ணத்துக்குக் கூட நான் இடமளிப்பதில்லை.
நீங்கள் விரும்புபவரையா அல்லது உங்களை விரும்புவரையா திருமணம் செய்வது நல்லது?
இரண்டிலும் சமநிலை வேண்டும். ஒன்றை மாத்திரம் தெரிவுசெய்வது கவலைக்குரியது.
காதல் குறித்த உங்கள் எண்ணம் என்ன?
காதல் சுயநலமற்றது. காதல் என்பது மற்றவரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஒருவர் துணை புரிவது. காதல் என்பது தியாகம் செய்வது, அந்த நபரின் மகிழ்ச்சியில் ஒரு அம்சமாக நீங்களாக இல்லாவிட்டாலும்கூட அவரைப் பற்றியே சிந்திப்பது.
நீங்கள் ஏன் இன்னும் காதலில் விழவில்லை?
நான் இன்னும் அத்தகைய ஆணை சந்திக்கவில்லை. முதல் பார்வையிலேயே காதல் என்பதை நான் அனுபவித்ததில்லை.
முதல் பார்வையில் காமம் ஏற்படலாம். ஆனால் காதல் அதற்கும் அப்பாற்பட்டது. அனைவரும் காதலை எதிர்பார்க்கிறார்கள். நானும் அப்படித்தான். ஆனால் எல்லாவற்றுக்கும் காலமும் இடமும் அமைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating