இரத்தினக் காதணியை விழுங்கிய சேவல்: மீட்டெடுக்க 8 வருடங்கள் காத்திருப்பு..!!

Read Time:2 Minute, 28 Second

1973Roosterஇங்கிலாந்தைச் பெண்ணொருவர் வளர்க்கும் சேவலொன்று அவரது அவரது தோளில் நிற்கும் போது அவர் அணிந்திருந்த இரத்தினங்களிலான காதணியொன்றை விழுங்கிய சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்தின் பேர்க்ஷெயாரில் வசிக்கும் 38 வயதான கிளெயர் லெனன் என்ற பெண் வளர்க்கும் 8 மாதங்களான ஸாரா எனப்பெயரிடப்பட் சேவலே அவ ரது காதல் பரிசாக வழங்கிய இரத்தினக் காதணியை விழுங்கியுள்ளது.

இதனையடுத்து மிருக வைத்தியரைத் தொடர்புகொண்ட போது ‘இது வயிற்றின் உட்பகுதியில் காதணி சிக்கியுள்ளது. இது வெளியில் வராது. எனவே அறுவை சிகிச்சை மூலமே காதணியை மீட்க முடியும்’ என வைத்தியர் தெரிவித்துள்ளார்.

அதன்பின் மற்றுமொரு வைத்தியரை நாடியுள்ளார் கிளெயர். அங்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது. இதில் குடல்பையில் சிக்கியிருப்பது உறுதியாகியுள்ளது. எனவே மலம் மூலம் வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அது கைகூடவில்லை.

இதனால் 300 ஸ்டேர்லிங் பௌண்ட் (சுமார் 63 ஆயிரம் இலங்கை ரூபா) பெறுமதியான இந்தக் காதணியை மீட்டெ டுக்க தற்போது 8 வருடங்கள் கிளெயர் காத்திருக்க வேண்டிருயிருக்கிறது.

இது குறித்து கிளெயர் கூறுகையில், ‘அறுவை சிகிச்சை மேற்கொண்டால் சேவல் இறக்கலாம். அது எனது 6 வயது மகளை பாதிக்கும். எனவே, அது இறக்கும் வரையில் காத்திருக்க வேண்டிருக்கிறது.

அடுத்த 8 வருடங்களில் அது இறக்கலாம். குறைந்தது காதணி எங்குள்ளது என எங்களுக்கு தெரியும். எனவே ஒரு நாள் அதனை மீளப்பெறலாம். அடுத்த சில வருடங்களுக்கு காத்திருந்தால் அதற்கு ஓர் அர்த்தம் உள்ளது’ என கிளெயர் கூறியுள்ளார்.

1973Rooster-1 1973Rooster

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நவாஸ்செரீப் வீட்டுக்கு ரூ.950 கோடியில் குண்டு துளைக்காத சுவர்..!!
Next post கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரையின்போது பொலீசார் அடாவடி..!!