325 கிலோ எடையுள்ள முதலையை பிடித்த குழு..!!

Read Time:1 Minute, 52 Second

1979ay_117அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்று 330 கிலோ (727 இறாத்தல்) எடையுடைய முதலையொன்றை பிடித்துள்ளது.

அமெரிக்காவின் மிசிசிப்பி நதியில் அண்மையில் பிடிக்கப்பட்ட இம்முதலை 13 அடி நீளமானது.  மசிசிப்பி மாநிலத்தில் பிடிக்கப்பட்ட முதலைகளில் இதுவே மிகப்பெரிய முதலையாகும்.

27 வயதான டஸ்டன் பொக்மன், அவரின் சகோதரரான ரையன் பொக்மன், கோல் லாண்டர்ஸ் ஆகியோர் இம்முதலையை பிடித்துள்ளனர்.

இம்முதலையை பிடிப்பதற்கு இரு மணித்தியாலங்களும் அதனை படகில் ஏற்றுவதற்கு இரு மணித்தியாலங்களும் தேவைப்பட்டதாக டஸ்டன் தெரிவித்துள்ளார்.

மிசிசிப்பி மாநிலத்தில் இவ்வருடம் முதல் முதலை வேட்டைக்கான அனுமதிப் பத்திரம் லொத்தர் குலுக்கல் முறையில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் பங்குபற்றுபவர்கள் முதலை வேட்டை தொடர்பான பாதுகாப்பு பயிற்சி நெறிகளில் கலந்துகொள்வது போன்ற பல நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.

இதற்குமுன் மிசிசிப்பி மாநிலத்தில்  697 இறாத்தல் எடையுள்ள முதலை பிடிக்கப்பட்டமையே சாதனையாக இருந்தது. எவரேனும் தனது சாதனையை முறியடித்தால் மீண்டும் பாரிய முதலையை பிடிக்க முயற்சிப்பேன் என அவர் டஸ்டன் தெரிவித்துள்ளார்.

1979tag-reut 1979ay_117

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சோனியாவுக்கு வாழ்த்து அனுப்பிய நவாஸ் ஷெரீப்..!!
Next post நவாஸ்செரீப் வீட்டுக்கு ரூ.950 கோடியில் குண்டு துளைக்காத சுவர்..!!