மாற்றமொன்றை ஏற்படுத்த கூட்டமைப்பை ஆதரியுங்கள்-இரா.சம்பந்தன் வேண்டுகோள்..!!

Read Time:1 Minute, 58 Second

download (11)இனப்பிரச்சினைக்கு கடந்த 60 வருடங்களாக உள்நாட்டில் தீர்வு காணப்படாமையினால் சர்வதேச மயப்படுத்தப்பட்ட போராட்டமாக அது மாற்றம் கண்டிருக்கின்றது.

எனவே உள்நாட்டு பிரச்சினையில் சர்வதேசம் தலையிடுவதாக ஜனாதிபதி கூறுவது பொருத்தமற்றதொன்று என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சம்பந்தன் மேலும் தெரிவித்ததாவது,

இனப்பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு காணப்படவேண்டும் என வலியுறுத்தி எங்கள் தலைவர்கள் 60 வருடங்கள் போராடியிருக்கின்றார்கள். ஆனால் தீர்வு காணப்படவில்லை.

காலத்திற்கு காலம் வ ந்த அரசாங்கங்கள் அதற்கான முயற்சிகளை கூட எடுத்திருக்கவில்லை.

அதனாலேயே சர்வதேச மயப்படுத்தப்பட்ட போராட்டமாக அது மாற்றப்பட்டு இன்று உச்ச நிலையை எட்டியுள்ளது.

சர்வதேச சட்டங்கள், நியமங்கள், ஒப்பந்தங்கள், ஜ.நா சபையின் விதிகள் மீறப்படுகின்றபோது சர்வதேசம் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாது. அந் த விடயத்தில் தலையிட்டு நீதியை நிலைநாட்டவேண்டியது அதனது கடமையாகும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மிஸ் லெபனான் அழகுராணி..!!
Next post ஒன்றாக மது அருந்திய நிலையில் நண்பனை குத்திக்கொன்றவன்..!!