முன்னாள் உலக அதிபார குத்துச்சண்டை சம்பியன் காலமானார்..!!
அதிபார குத்துச்சண்டையில் உலகின் முன்னாள் சம்பியன்களில் ஒருவரான டொமி மொரிஸன் தனது 44 ஆவது வயதில் ஞாயிறன்று இரவு காலமானார்.
அமெரிக்காவைச் சேர்ந்த டொமி மொரிஸன், 1993 ஆம் ஆண்டு ஜோர்ஜ் போர்மனை தோற்கடித்து உலக குத்துச்சண்டை அமைப்பின் (டபிள்யூ பி.ஓ.) உலக அதிபார சம்பியன் பட்டத்தை வென்றவர்.
1996 ஆம் ஆண்டு ஆர்தர் வீதர்ஸுடனான போட்டியில் பங்குபற்றுவதற்கு முன்னர் டொமி மொரிஸன் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் அவரின் குத்துச்சண்டை வாழ்க்கை தடுமாறத் தொடங்கியது.
எனினும் தனக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை எனக் கூறிய டொமி மொரிஸன், பலதடவை மீண்டும் குத்துச்சண்டை அரங்குக்கு திரும்ப முயன்றார். இறுதியாக 2008 ஆம் ஆண்டு அவர் உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், ஞாயிறன்று இரவு அவர் காலமானதாக மொரிஸனின் குத்துச்சண்டை ஊக்குவிப்பாளரான டொனி ஹோல்டன் தெரிவித்துள்ளார். எனினும் இம்மரணத்துக்கான காரணத்தை ஹோல்டன் வெளியிடவில்லை. 1990 ஆம் ஆண்டு ‘ரொக்கி வீ’ எனும் குத்துச்சண்டை திரைப்படத்தில் சில்வெஸ்டர் ஸ்டாலோனுடன் டொமி மொரிஸன் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating