தொடர்ச்சியா 8 ஆட்டங்களில் வெற்றி: பிரேசிலின் சாதனையை ஆஸ்திரேலியா தடுக்குமா?- நாளை பலப்பரீட்சை

Read Time:5 Minute, 19 Second

W.Football.jpgஉலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் `எப்’ பிரிவில் உள்ள போர்ச்சுகல்- ஈரான் , `இ’ பிரிவில் உள்ள செக் குடியரசு-கானா, இத்தாலி-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை கால்பந்தின் 10-வது நாளான நாளை `எப்’ பிரிவில் நடைபெறும் ஆட்டம் ஒன்றில் பிரேசில், ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் தனது தொடக்க ஆட்டத்தில் குரோசியாவை 1-0 என தோற்கடித்து இருந்தது.

1974-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தகுதி பெற்றுள்ள ஆஸ்திரேலியா முதல் ஆட்டத்தில் ஆசிய கண்டத்தில் முதன்மை அணியாக விளங்கிய ஜப்பானை படுதோல்வி அடையச் செய்தது. இந்த ஆட்டத்தை ஆஸ்திரேலியா 3-1 என வென்றது. அதுவும் கடைசி 7 நிமிடத்தில் 3 கோல் அடித்தது. ககில்பும், 2 கோலும், அலோசிஜான் ஒரு கோலும் போட்டனர்.

அந்த அணியின் முன்களம் சிறப்பாக உள்ளது. இதனால் பிரேசில் அணிக்கு சற்று நெருக்கடி கொடுக்கும். இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளுள் ஒன்றாக திகழும் பிரேசில் குரோசியாவிடமே சாதாரண வெற்றியைத்தான் பெற்றது. அந்த ஆட்டத்தில் ரொனால்டோ ஆடிய விதம் வேதனையாக அமைந்தது.

தனது உடல்வாகு முன்பு போல் ஒத்துழைக்க மறுக்கிறது என அவரே கூறியுள்ளார்.இதனால் இந்த உலக கோப்பையில் அவர் இனிமேல் ஜொலிப்பது என்பது அரிதுதான். பிரேசில் அணியில் முன்களம் பலவீனமாக உள்ளது. இதை குரோசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் காண முடிந்தது. ஆனால் நடுகளமும், பின்களம் தூண் போல் உள்ளது. குரேசியா ஆட்டத்தில் ககா கோல் அடித்தார். ரொனால்டின்னோவின் ஆட்டம் வியக்கும் விதத்தில் இருந்தது. அவருடைய ஆட்டத்தில் ஒருவித கலையை காண முடிந்தது.

ஆஸ்திரேலியாவும் பிரேசிலும் இதுவரை 5 முறை மோதி உள்ளன. இதில் பிரேசில் 3 முறையும், ஆஸ்திரேலியா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்திருந்தது. கடைசியாக 2001-ம் ஆண்டு கான்பெட ரேஷன் கோப்பையில் பிரேசிலை ஆஸ்திரேலியா 0-1 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது.

பிரேசில் அணி குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றியின் மூலம் உலக கோப்பைகளில் தொடர்ச்சியாக 8 ஆட்டங்களில் வென்றுள்ளது. ஆஸ்திரேலிய வீரர்களின் ஆட்டம் துடிப்புடன் உள்ளதால் நாளைய ஆட்டத்தில் பிரேசிலின் வெற்றி தொடருமா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. மேலும் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று 2-வது சுற்றில் எளிதில் நுழைய இரு அணிகளே முனைப்புடன் ஆடும்.

`ஜி’ பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் பிரான்சு- தென் கொரியா அணியை எதிர் கொள்கிறது.

1998-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற பிரான்சு அணியால் தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் டிரா செய்ய மட்டுமே முடிந்தது. ஆனால் தென் கொரியா, டோகாவை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்திருந்தது. பிரான்சு நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்குடன் களம் இறங்குகிறது. அந்த அணி இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் 2-வது சுற்றில் நுழைய கடைசி ஆட்டத்தில் டோகோவுடன் போராட வேண்டியது வரும்.

நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் `எப்’ பிரிவில் உள்ள ஜப்பான், குரோசியாவுடன் மோதுகிறது. ஜப்பான் தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடமும், குரோசியா, பிரேசிலிடம் தோற்றுள்ளது. நாளைய ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் எந்த அணி தோற்றாலும் உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஈராக்கில் மொத்தம் 2,500 அமெரிக்கர்கள் பலி
Next post தமிழக கடலோர பகுதி மீனவர்களுக்கு எச்சரிக்கை