சுறாக்களுடன் நீந்தும் பெண்..!!

Read Time:2 Minute, 3 Second

1864Shark-1தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர், ஆபத்தான விலங்குகளாக கருதப்படும் சுறாக்களுடன் நீந்தி புகைப்படங்களை பிடித்துக்கொண்டுள்ளார்.

மனிதர்களை கொல்வதற்காக பிறந்த விலங்குகள் அல்ல என்பதையும்  மக்களுக்கு உணர்த்துவதற்காகவே டைகர் ஷார்க் (புலிச் சுறா) வகையைச் சேர்ந்த சுறாக்களுடன் தான் நீந்தியதாக லெஸ்லி ரொசெட் எனும் இப்பெண் கூறுகிறார்.கரிபியன் பிராந்திய நாடான பஹாமஸிலுள்ள கடற்பகுதியில் அவர் சுறாக்களுடன் நீந்தினார். ‘டைகர் ஷார்க்’ சுறாக்களுக்கு பிரசித்தமான இக்கடற்கரைப்பகுதி ‘டைகர் பீச்’ என அழைக்கப்படுகிறது.

கடலில் நீந்துபவர்கள் சுறாக்கள் மீதான அச்சம் காரணமாக வலைகளை பயன்படுத்துவதும் சுறாக்களை கொல்வதும்  அநாவசியமானவை என லெஸ்லி ரொசெட் கூறுகிறார்.

சுறாக்களிலிருந்து மனிதர்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்தும் வலைகளால் டொல்பின்கள், ஆமைகள் போன்ற உயிரினங்களும் கொல்லப்படுகின்றன என சூழலியலாளர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாதுகாப்பு கவசங்கள் இல்லாமலும் சுறாக்களை நெருங்க முடியும் என்பதை உணர்த்துவதற்காக நீச்சலுடை

களுடனும் இவர் சுறாக்களுடன் நீந்தியுள்ளார்.
இவர் 2003 ஆம் ஆண்டு தனது வேலையை விட்டுவிட்டு சுறாக்களை பாதுகாப்பதற்கான அமைப்பொன்றை நிறுவியமை குறிப்பிடத்தக்கது.
1864Shark-4
1864Shark-1
1864Shark-3
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்க அலம்பல் தாங்கலையே… ‘டார்ச்சர்’ கணவரைக் கொன்று குக்கரில் சமைத்த சீனப் பெண்..!!
Next post உளவு பார்த்ததென்ற சந்தேகத்தில் எகிப்து பொலிஸ் பறவை தடுத்து வைப்பு..!!