ஒட்டிப் பிறந்த் இரட்டைக் குழந்தைகள் பிரித்தெடுப்பு..!!

Read Time:2 Minute, 20 Second

1888Untitled-4021சீனாவின் குவாங்க்சி மாகா­ணத்தில் உள்ள குய்பிங் வைத்­தி­ய­சா­லையில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி யுவே ஜூக்சிங் என்ற பெண்­ணுக்கு பிர­சவம் நடந்­தது.

இந்த பிர­ச­வத்தில் அவ­ருக்கு அழ­கான 2 பெண் குழந்­தைகள் பிறந்­தன. ஒன்­றன்பின் ஒன்­றாக பிறக்­காமல் இரு குழந்தை­களும் ஒட்டிப் பிறந்­ததால் அவை எத்­தனை நாள் உயி­ருடன் இருக்­குமோ என்ற கவலை யுவே ஜூக்­சிங்கின் மனதை வாட்­டி­யது.

இரு குழந்­தை­க­ளையும் சத்­தி­ர­சி­கிச்சை மூலம் பிரித்­தெடுக்­கலாம். ஆனால், அதற்கு நிறைய செல­வாகும் என வைத்­தி­யர்கள் தெரி­வித்­துள்ளனர்.

இதற்­காக தெரிந்­த­வர்­களின் மூலம் இணை­யத்­த­ளங்­களில் குழந்­தை­களின் புகைப்­ப­டங்­களை வெளி­யிட்டு நிதி­யு­தவி செய்­யு­மாறு யுவே ஜூக்சிங் வேண்­டுகோள் விடுத்­தி­ருந்தார்.

இரண்டு இலட்சம் யுவான்  நிதி குவிந்­தது. சத்­தி­ரச்­சி­கிச்­சையை இல­வ­ச­மாக செய்ய குவாங்க்சி வைத்­திய பல்­க­லைக்­க­ழக வைத்­தி­ய­சா­லையும் முன்­வந்­தது.

இத­னை­ய­டுத்து, ஈரலின் மூலம் ஒட்டிப் பிறந்த அந்த குழந்­தை­களை பிரித்­தெ­டுக்க கடந்த 8ஆம் திகதி சத்­தி­ரச்­சி­கிச்சை  நடை­பெற்­றது.

20 வைத்­தி­யர்களின் உழைப்பில் சுமார் 10 மணி நேரம் நீடித்த இந்த சத்­தி­ர ­சி­கிச்­சையில் இரு குழந்­தை­களும் வெற்­றி­க­ர­மாக தனித்­த­னி­யாகப் பிரித்­தெ­டுக்­கப்­பட்­டன.

சத்திரசிகிச்சைக்கு பிந்­தைய 3 வார சிகிச்­சைக்கு பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமைதாயுடன் சேய்­களும் நல­மாக வீட்டை சென்­ற­டைந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­து.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுவனை கடத்தி, இரு கண்களின் விழி வெண்படலத்தை மட்டும் வெட்டிய கொடூரம்..!!
Next post 14ம் ஆண்டு நினைவு நாள்! (தோழர் மாணிக்கதாசன் -உபதலைவரும், இராணுவத் தளபதியும் -புளொட்) -.அஞ்சலி அறிவித்தல்..!!