மரணித்தோருக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலிக்கு தடை..!!

Read Time:2 Minute, 47 Second
download (16)இறுதிக்கட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை மேற்கொண்ட முயற்சி அரசின் கடும் எதிர்ப்பையடுத்து கைவிடப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை பயணம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு மற்றும் கொழும்பிலுள்ள ஐ.நா. அலு வலகம் தாயாரித்திருந்த உத்தி யோகபூர்வ நிகழ்ச்சிநிரலில் மலர்வளையம் வைக்கும் நிகழ்வு உள்ளடக்கப்படவில்லை.

இருப்பினும்இ முள்ளிவாய்க் காலுக்குச் செல்லும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணை யாளர்இ இறுதிப்போரில் மரணித் தவர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார் என வெளிவிவகார அமைச்சுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்துஇ கொழும் பிலுள்ள ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி சூபினே நெண்டியுடன் தொடர்பு கொண்ட வெளிவிவகார அமைச்சு இது தொடர்பில் வினவியபோது மேற்படி தகவலை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையடுத்துஇ அரச பாதுகாப்பு பிரிவுக்குத் தகவல் வழங்கப்பட்டதைய டுத்துஇ பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சுகள் இணைந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாயின்இ கடும் மக்கள் எதிர்ப்புக் கிளம்பும்.

அதனால் இதற்கு அனுமதியளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர்இ போர் இடம்பெற்ற பல நாடுகளுக்கு நான் சென்றிருந்தபோது போரில் மரணித் தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வழமை.

அவ்வாறானதொரு நடவடிக்கையை இங்கும் மேற்கொள்ள எண்ணியிருந்தேன். இருப்பினும் அது சாத்தியப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படைகளை அகற்றுமாறு அரசிடம் நவிப்பிள்ளை வலியுறுத்தல்..!!
Next post தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் திறந்துவைக்க ஏற்பாடு..!!