கோல் எதுவும் அடிக்காமல் மெக்சிகோ-அங்கோலா ஆட்டம் டிராவில் முடிந்தது
உலககோப்பை கால்பந்து போட்டியில் 8-வது நாளான நேற்று `சி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா- செர்பியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முழு போக்கையும் தன் வசப்படுத்தி கொண்ட அர்ஜென்டினா கோல் மழை பொழிந்தது. முடிவில் 6-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-வது சுற்றுக்கு அந்த அணி முன்னேறியது. இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஆலந்து -ஐவரிகோஸ்ட் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆலந்து 2-1 என்ற கோல் கணக்கில் ஐவரிகோஸ்டை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஹேன்ஓவர் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் `டி’ பிரிவில் இடம் படித்துள்ள மெக்சிகோ, அங்கோலா அணியுடன் மோதியது. ஆட்டத்தின் 14 வது நிமிடத்தில் மெக்சிகோ கேப்டன் ராபில்மார்சுஸ் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவர் அடித்த பந்து கோல் கம்பத்தின் வெளியே சென்று அதிர்ச்சி கொடுத்தது.
அதன் பிறகு மீண்டும் 45-வது நிமிடத்தில் மெக்சிகோ கோல் அடிக்க முயன்றது. குவிர்மோ அடித்த ஷாட்டை அங்கோலா கோல்கீப்பர் ரிகார்டோ அருமையான முறையில் தடுத்தார். ஆட்ட நேர முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இதனால் 2-வது பாதியில் மெக்சிகோ வீரர்கள் ஆக்ரோசத்துடன் ஆடினார்கள். ஆனால் பலமுறை அவர்களின் கோல் அடிக்கும் வாய்ப்பை, ரிக்கார்டோ தகர்த்தார். ஆட்டத்தின் 78-வது நிமிடத்தில் அங்கோலா வீரர் மங்காங்கா பந்தை கையால் தடுத்தார். இதனால் அவருக்கு `ரெட்கார்டு’ வழங்கப்பட்டது. கடைசி 12 நிமிடங்களில் அங்கோலா அணி 10 வீரர்களுடன் ஆடியது.
எவ்வளவோ போராடியும் கடைசி வரை அங்கோலா அணிக்கு எதிராக மெக்சிகோ வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் இந்த ஆட்டம் கோல் எதுமின்றி 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. புதிதாக களம் கண்டுள்ள அங்கோலா இந்த ஆட்டம் டிராவில் முடிந்ததன் மூலம் ஒரு புள்ளியைப் பெற்றுள்ளது.
இந்த போட்டியின் முடிவு மெக்சிகோவுக்கு சற்று நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அந்த அணி 2-வது சுற்றில் நுழைய வேண்டுமானால் 21-ந்தேதி போர்ச்சுகலுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தாலே போதும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...