ஓமந்தை சோதனைச் சாவடியில் சோதனைகள் நிறுத்தம்..!!

Read Time:3 Minute, 11 Second

Minolta DSC வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் இன்றுமுதல் பொதுமக்கள் மீதான சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவத்துள்ளார்.

வவுனியா ஓமந்தை இராணுவ முகாமில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவத்திருந்தார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனங்களின் பதிவு மட்டும் இடம்பெறும் எனவும், போக்குவரத்து பயணிகளை வாகனங்களில் இருந்து இறக்கி சோதனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் இருந்து தெற்குக்கும் தெற்கில் இருந்து வடக்கிற்கும் கொண்டு செல்லப்படும் பொருட்களும் சோதனை நடவடிக்கைகளுக்காக இறக்கி ஏற்றப்படாது எனவும் வன்னி கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை சோதனைச் சாவடியானது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் உறுதுணையாக காணப்பட்டதாக தெரிவித்ததுடன் இதனூடாக தினமும் சராசரியாக 320 பேரூந்துகளும் 575 பார ஊர்திகளும் 630 சிறிய ரக வாகனங்களும் தெற்கில் இருந்து வடக்கிற்கு சென்று வந்ததாகவும் தினமும் சராசரியாக 15,377 உள்ளுர் பயணிகளும் 198 வெளிநாட:டு பயணிகளும் தெற்கில் இருந்து வடக்கிற்கு சொன்றுவந்ததாகவும் தெரிவத்துள்ளார்.

இதேவேளை வடக்கில் இருந்து தெற்கிற்கு 254 பேரூந்துகளும் 710 பார ஊர்திகளும் 773 சிறிய ரக வாகனங்களும் வடக்கில் இருந்து தெற்கிற்கு சென்று வந்ததாகவும் தினமும் சராசரியாக 17,164 உள்ளுர் பயணிகளும் 111 வெளிநாட்டு பயணிகளும் தெற்கிற்கு செல்வதாகவும் தெரிவத்திருந்தார்.

இத்துடன் இச் சோதனைச்சாவடியில் யுத்த காலத்தின் போது ரிமோட் கொன்றோல்கள், வயர்கள், தொலை நோக்கிகள், திசை காட்டிகள், சிறிய ரக பற்றரிகள், இராணுவ பயன்பாட்டிற்க்கான பொருட்களை கொண்டு செல்வதை கடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவத்துள்ளார்.

இந் நிலையில் சுமார் 15 வருடங்களாக செயற்பட்டு வந்த இச் சோதனைச்சாவடி இன்றில் இருந்து பரிசோதனைகள் நிறுத்தப்பட்டு மக்கள் சுதந்திரமாக சென்று வருவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் மொத்த பெறுமதி 150 கோடி..!!
Next post கோட்டையில் நடமாடும் விபச்சாரம், 10 பெண்கள் கைது..!!