மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் மொத்த பெறுமதி 150 கோடி..!!

Read Time:2 Minute, 20 Second

a367be4d-bc32-4ec9-a698-0cb3f2cab74d_S_secvpfசுங்க வருமான கண்காணிப்பு பிரிவினரால் நேற்று மொத்தமாக 260 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

150 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றட்டுள்ளதாக சுங்க வருமான கண்காணிப்பு பிரிவின் அத்தியட்சகர் பராக்ரம பஸ்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

விசாரணைகளின் பின்னர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுங்க கண்காணிப்பு அத்தியட்சகர் தெரிவிக்கின்றார்.

கடந்த ஓகஸ்ட் மாத முற்பகுதியில் கிடைத்த தகவலுக்கமைய குறிப்பிட்ட கொள்கலனை அதன் உரிமையாளர் அடையாளம் காணும்வரை தடுத்து வைத்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் பின்னர் உரிமையாளரைக் கைது செய்ததுடன், கொள்கலனை சோதனைக்கு உட்படுத்தியதாக சுங்க வருமான கண்காணிப்பு அத்தியாட்சகர் கூறியுள்ளார்.

கொழும்பு 10 இலுள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளர் முகவரியுடன் இந்த கொள்கலன் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், மஹவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே அதன் உண்மையான உரிமையாளர் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

தெற்காசியாவில் இதுவரை கைப்பற்றப்பட்ட ஆகக்கூடிய போதைப்பொருள் தொகை இதுவென கருதுவதாகவும் சுங்க வருமான கண்காணிப்பு பிரிவு சுட்டிகாட்டியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நவனீதம்பிள்ளையின் கோரிக்கை அரசால் நிராகரிப்பு..!!
Next post ஓமந்தை சோதனைச் சாவடியில் சோதனைகள் நிறுத்தம்..!!