ஆணையிறவில் இராணுவச் சோதனைச் சாவடி அகற்றப்பட்டது..!

Read Time:2 Minute, 53 Second

download (16)ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையை முன்னிட்டு ஆணையிறவில் அமைக்கப்பட்டிருந்த இராணுவச் சோதனைச் சாவடி உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள மனித உரிமைகள் ஆணையாளர் கடந்த திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணத்திற்கு வந்தடைந்தார்.

இவரது விஜயத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த அதேவேளை அவர் விஜயம் செய்த பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

குறிப்பாக வெளியிடங்களில் இராணுவத்தினரது நடமாட்டங்கள் வழமைக்கு மாÙக மிகக் குறைவாகவே காணப்பட்டன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கு நவிப்பிள்ளை விஜயம் செய்து அப்பகுதிகளின் தற்போதைய நிலைமைகளை ஆராய்ந்தார்.

நவிப்பிள்ளையின் விஜயத்தை முன்னிட்டு ஆணையிறவில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த இராணுவச் சோதனைச் சாவடி மூடப்பட்டிருந்ததோடு அங்கு வழமையாக கடமையிலிருக்கும் இராணுவத்தினரையும் காண முடியாதிருந்தது. குறிப்பாக சோதனைச் சாவடி இருந்ததற்கான எந்த அறிகுறிகளும் இல்லாதவாறு முழுமையாக யாவும் அகற்றப்பட்டிருந்தன.

இவை தவிர கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிலும் நவிப்பிள்ளையின் விஜயம் ஒழுங்கு செய்யப்பட்ட பிரதான வீதிகளிலும் இராணுவத்தினரது நடமாட்டம் தடை செய்யப்பட்டிரு;நததோடு இராணுவத்தினர் தொடர்பான தடயங்கள் மற்றும் எச்சங்களும் ஒன்றும் இல்லாதவாறு மிக துரித கதியில் அகற்றப்பட்டிருந்தது.

நவிப்பிள்ளைக்காக மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான ஏற்பாடுகள்  பொதுமக்கள் மத்தியில் கடும் வேடிக்கையையும் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மத ஸ்தலங்களில் மிருக பலிக்கு தடை..!!
Next post பட்டம் விட்ட சிறுவன் உயிரிழப்பு..!!