கழிவறையை வீடாக மாற்றிய குடும்பம்..!!
வீடுகளுக்கான தேவை அதிக ரித்துள்ள நிலையில் இடங்களுக் கான மதிப்பு மற்றும் அதிகரித்துள்ள வாடகை போன்றவற்றுக்கு வழக்கத்துக்கு மாறான தீர் வாக சீனாவைச் சேர்ந்த குடும்ப மொன்று கழிவறையொன்றை வீடாக மாற்றியுள்ளது.
ஷெங் லிங்ஜுன் என்ற 33 வயதான சீனர் ஒருவர் வேலை தேடி ஷென்யங் நகருக்கு 2006ஆம் ஆண்டில் குடிபெயர்ந்துள்ளார். அங்கு வாடகைக்கு வீடொன்றினை பெறுவதற்கு அவரால் முடியவில்லை.
ஆதனால் ஹோட்டல் ஒன்றினால் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட 20 சதுர மீற்றர் அளவான ஆண்கள் கழிவறையை வாடகைக்குப் பெற்று அதனை வீடாக மாற்றியுள்ளார்.
பாதணி திருத்துநரான ஷென், 2010ஆம் ஆண்டில் திருமணம் செய்து இந்த கழிவறை வீட்டிலேயே தேவி என்ற குழந்தையையும் பெற்று வாழ்கின்றார். இங்கு தங்குவதற்கு ஷெங், வருடத்திற்கு சுமார் 2 இலட்சம் ரூபாவை வாடகையாக செலுத்துகிறார்.
ஷெங் அவரது வீட்டைப்பற்றி கூறுகையில், ‘இது சிறிய வீடுதான். ஆனால் பூரணமானது. தற்போதும் சிறுநீர் கழிக்கும் யூரினல்கள் இங்கு உள்ளன. இருப்பினும் ஏற்கெனவே நான் இருந்த இடங்களை விட இது சிறப்பாக உள்ளது’ என்கிறார்.
கழிவறையாக இருந்தாலும் கட் டில், தொலைக்காட்சிப் பெட்டி என இடத்திற்கு ஏற்பவாறு தங்களுக்கு தேவையானதை இவர்கள் இங்கு மேற்கொண்டுள்ளனர். ஆனாலும் கூரைக்குமேல் தற்போதும் பயன்பாட்டிலுள்ள கழிவறைகளிலிருந்து குழாய் வழியாக யூரினலுக்கு வரும் கழிவுகளை அகற்றவேண்டி இருக்கிறார்கள் இவர்கள்.
‘சமையலுக்கு பொருத்தமான இடமாக இது இல்லை என்றாலும் நான் இங்கு சமைக்கிறேன்’ எனக் கூறுகிறார் ஷெங்கின் மனைவி வேங். 1999ஆம் ஆண்டு விஞ்ஞான தொழில்நுட்பக் கல்லூரியில் படி ப்பதற்கான வாய்ப்பினை பெற்ற போதிலும் ஏழ்மையின் காரணமாக படிக்கமுடியவில்லை. தொடர்ந்து 50 யுவானுடன் (சுமார் 1000 ரூபா) ஷெங்யாங் நகருக்கு வந்துள்ளார்.
தற்போது இவர் தங்கியுள்ள ஹோட்டல் வழங்கியுள்ள இடத் தில் பாதணி சுத்தப்படுத்தி மாதத்துக்கு 2000 யுவான்களை வருமானமாக ஈட்டுகிறார். அத்துடன் பாதணி திருத்துவதிலும் ஈடுபடுகிறார். இதில் அவரது குடும்பத்தையும் வயதான பெற்றோரையும் கவனிக்கிறார்.
ஷெங்கின் வதிவிடம் இன்னும் ஜிலின் மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளதால் குறைந்த வாடகை வீட்டை ஷெங்யாங்கில் பெறுவதிலும் ஷெங் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளார்.
தன்னிடம் தற்போது உள்ளவற் றால் நான் திருப்திகொள்கிறேன். நாங்கள் இளமையானவர்கள். தொடர்ச்சியாக உழைத்து வாழ்க் கையில் முன்னேற்றமடைவோம் எனக் கூறுகிறார் ஷெங்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating