உலக அழகிப்போட்டி நடத்த இந்தோனேசிய முஸ்லிம் மதத்தலைவர்கள் எதிர்ப்பு..!!

Read Time:1 Minute, 39 Second

d4cfbe5c-fccf-4897-a4b6-74637693fb9a_S_secvpfஇந்தோனேசியாவில் அடுத்த ஆண்டு உலக அழகிப்போட்டி நடத்தப்பட இருக்கிறது.

இந்நிலையில் இப்போட்டிக்கு இந்தோனேசியாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த மாதம் தொடக்கத்தில் இந்தோனேசியாவின் மிகவும் செல்வாக்கு உள்ள உலமா சபையின் இஸ்லாமிய மதக்குருக்களின் உயர் மட்டம் கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்தில், பெண்கள் தங்களின் தோலை காட்டி நடந்து வரும் இப்போட்டியானது இஸ்லாமிய மதக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், இப்போட்டியை இந்தோனேசியாவில் நடத்தக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதனையடுத்து இஸ்லாமிய மதக்குருக்கள் இப்போட்டியை இந்தோனேசியாவில் நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அரசு இப்போட்டியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் புகைப்பிடித்தல் மற்றும் யோகாவிற்கு எதிராக பல முரண்பாடான உத்தரவுகளை உலமா சபை பிறப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உலமா சபை விதித்துள்ள இந்த உத்தரவை மீறுவது பாவம் என்று இந்தோனேசிய மக்களில் பெரும்பாலானோர் கருதுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை மோசமாக பலாத்காரத்துக்கு உட்படுத்திய நகரசபை உறுப்பினர் கைது..!!
Next post கழிவறையை வீடாக மாற்றிய குடும்பம்..!!