புதைத்த 2 வாரங்களுக்குப் பின் உயிருடன் திரும்பி வந்த பெண்..!!
அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்த ஷரோலின் ஜாக்சன் (50), என்ற பெண் கடந்த மாதம் திடீரென காணாமல் போனார். அவர் காணாமல் போனது குறித்து ஷரோலினின் தாயார் கேர்ரி மின்னி போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகார் அளிக்கப்பட்டு சில நாட்கள் கழிந்த நிலையில் பிலடெல்பியா பகுதியின் சாலையோரம் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அந்த பெண்ணின் உடலை அருகில் உள்ள ஆஸ்பத்திரியின் பிணவறையில் வைத்திருந்த போலீசார் இதுபற்றி ஊடகங்களில் விளம்பரம் வெளியிட்டனர்.
விளம்பரத்தைப் பார்த்த கேர்ரி மின்னி அந்த பிணம் தனது மகள் ஷரோலின் ஜாக்சன்தான் என்று கூறி பிணத்தை பெற்றுக் கொண்டார்.
உரிய மரியாதைகளுடன் பிணமும் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஒருவாரத்திற்கு முன்னர் ஷரோலின் ஜாக்சன், திடீரென வீட்டு வாசலில் வந்து நின்றார். மகளின் கால்கள் தரையில் பதிந்திருக்கிறதா ? என்று உற்றுப் பார்த்த கேர்ரி மின்னி தனது கையையும் கிள்ளிப் பார்த்துக் கொண்டார்.
உங்கொப்பரான்னே… சத்தியமா வந்திருப்பது ஷரோலின் ஜாக்சன்தான் என்பதை உறுதி செய்து கொண்ட அவர், நாம் அழுது புலம்பி அடக்கம் செய்தது யாருடைய பிணத்தை ? என்று சிந்திக்கத் தொடங்கினார். இவ்விவகாரம் மீண்டும் போலீசாரின் காதுகளுக்கு எட்டியது.
உயிருடன் வந்த பெண்ணின் கை ரேகையை ஷரோலினின் பழைய கை ரேகை பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த போலீசார், இது ஷரோலின்தான் என்பதை உறுதி செய்தனர்.
புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுத்து அது யாருடைய பிரேதம் ? என்பதை கண்டறியும் முயற்சியில் தற்போது பிலடெல்பியா போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating