இனத்துவேச மோதல்களை ஏற்படுத்தும் சதித்திட்டமே கெப்பிட்டிகொல்லாவை தாக்குதல்

Read Time:1 Minute, 27 Second

kepitigollewa.4.jpgஅநுராதபுரம் கெப்பிட்டிகொல்லாவை கிளைமோர் தாக்குதல்மூலம் பொதுமக்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பதை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இத்தாக்குதலுக்கு புலிகளே பொறுப்பென அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. பயங்கரவாதிகள் இனத்துவேச மோதல்களை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொண்ட சதித் திட்டமே இத்தாக்குதல் என்றும், இச்சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் பொறுமையைக் கடைப்பிடித்து அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் அரசாங்கம் அறிக்கை விடுத்துள்ளது.
இச்;சம்பவம் குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இதேவேளை பயங்கரவாதிகளின் இவ்வாறான கொடூர திட்டங்களை நன்கறிந்து பொதுமக்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை வழங்;க வேண்டுமென்று சர்வதேச சமூகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
kepitigollewa.5.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தாய்லாந்தில் அடுத்தடுத்து 41 குண்டுகள் வெடித்தன 2 பேர் பலி; 16 பேர் காயம்
Next post அரசியல் தோல்விகளுக்கு பொது மக்கள் மீதான படுகொலைகளின் மூலம் தீர்வுகாண முனைகின்றனர் பிரபா குழுவினர் – தூயவன்