ஆளில்லா விமானம் மூலம் வாத்துக்களை விரட்டும் கனடா..!!

Read Time:1 Minute, 42 Second

008டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஏமன் உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாதிகளை அழிக்க அவற்றின் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

கனடா நாடும் ஆளில்லா விமானம் (டிரோன்) தயாரித்துள்ளது. ஆனால், அது அவற்றை பயன்படுத்துவது வேடிக்கையான விஷயமாக உள்ளது.

அதாவது கனடா தலைநகர் ஒட்டாவாவில் ‘ஜீஸ்’ எனப்படும் வாத்து போன்ற பெரிய வடிவிலான பறவைகள் அதிகம் உள்ளன. அவை ஒட்டாவாவில் உள்ள ஆற்றில் இறங்கி கூட்டம் கூட்டமாக நீந்துகின்றன.

மேலும் ஆற்றின் நீரை அவை மிகவும் அசுத்தம் செய்து வருகின்றன. இது பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் மிகவும் இடையூறாக உள்ளது.

எனவே, ஆளில்லாமல் பறக்கும் 26 இஞ்ச் அகலமுள்ள ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் அவை மிகவும் தாழ்வாக பறந்து அவற்றை தண்ணீரில் இருந்து வெளியே விரட்டியடிக்கின்றன.

இந்த சம்பவம் தினசரி காலையில் நடைபெறுகிறது. இதனால் ஒட்டாவா ஆற்றுக்கு வரும் சுற்றுலா பயணிகள் நிம்மதியாக படகு சவாரி செய்து பொழுதை களிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மணபந்தத்தில் மோப்பநாய்கள்; தேனிலவுக்கும் அனுப்பிவைப்பு..!!
Next post உலக வரை படத்தை தனது முதுகில் பச்சை குத்திக்கொண்ட நபர்..!!