20 வருடங்களில் முதல் தடவையாக தலைமயிரை கத்தரித்த ஆணும், 55 அடி நீளமான கூந்தல் கொண்ட பெண்ணும்…!!

Read Time:3 Minute, 39 Second

1767SNN183316 வய­தி­லி­ருந்து தனது தலை­மயிரை கத்­த­ரிக்­காமல் வளர்த்­து ­வந்த நபர் ஒருவர், 20 வரு­டங்­களின் பின் அண்­மையில் தலை­ம­யிரை கத்­த­ரித்­துக்­கொண்­டுள்ளார்.

பிரிட்­டனைச் சேர்ந்த காரெத் ரொபின்ஸன் எனும் இந்­நபர் 16 வய­தா­ன­போது, எந்த வகை­யான, சிகை­ய­லங்­காரம் தனக்குப் பொருத்­த­மாக இருக்கும் எனத் தெரி­யாமல் தலை­ம­யிரை பின்­னோக்கி சீவி சடை­பின்­னிக்­கொண்­டாராம்.

5 அடி நீளம்­வரை இத்­த­லை­மயிர் வளர்ந்த பின்னர் கடந்த இரு வருட காலத்தில் முதல் தட­வை­யாக சிகை­ய­லங்­கார நிலை­யத்­துக்கு அவர் சென்­றுள்ளார். அவரின் கத்­த­ரிக்­கப்­பட்ட தலை­மயிர் சுமார் ஒன்­றரை கிலோ எடை­கொண்­ட­தாக இருந்­தது.

தான் கதி­ரையில் அம­ரும்­போது பல சந்­தர்ப்­பங்­களில்  தலை­மயிர் மீது அமர்ந்­து­விட நேரிட்­டுள்­ள­தாக 36 வய­தாகும் ரொபின்ஸன் கூறு­கிறார்.

இது­வரை தலை­ம­யிரை கழு­வு­வது சிர­ம­மான ஒரு விட­ய­மாக இருந்­த­தாக அவர் தெரி­வித்­துள்ளார். குளிக்­கும்­போது, ரொபின்­ஸனின் தலை­ம­யிரை அவரின் காத­லி­யான ஜெனா (22) தூக்கிப் பிடித்­துக்­கொண்­டி­ருப்­பாராம். இல்­லா­விட்டால் தலை­மயிர் காய்­வ­தற்கு மூன்று நாட்கள் செல்­லுமாம்.

ஒன்­றரை கிலோ எடை­யு­டைய தலை­ம­யிரை கத்­த­ரித்­தபின் பெரும் வித்­தி­யா­சத்தை உணர்­வ­தாக அவர் கூறு­கின்றார்.

இத்­த­லை­ம­யிரை கத்­த­ரித்­ துக் ­கொள்­வதன் மூலம் அனு­ச­ர­ணை­யாளர் ஊடாக, புற்­றுநோய் ஆராய்ச்சி நிலை­ய­மொன்­றுக்கு 5,000 ஸ்ரேலிங் பவுண்­கள் நிதி­யையும் அவர் திரட்­டி­யுள்­ளமை குறிப்­பி­டத் ­தக்கது.

இதே­வேளை, உலகின் மிக நீள­மான தலை­மயிர் கொண்ட பெண்­ணாக ஆஷா மண் ­டேலா கின்னஸ் சாதனை நூலினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ளார்.

ட்ரினிடாட் அன்ட் டுபாக்கோ நாட்­டி­லி­ருந்து அமெ­ரிக்­கா­வுக்கு குடி­பெ­யர்ந்­தவர் இவர். ஆஷாவின் கூந்தல் 55 அடி நீள­மா­னது. பெரி­ய­தொரு பஸ்­ஸை ­வி­ட ­நீ­ள­மான இக்­கூந்தல் சுமார் 20 கிலோ எடை கொண்டது.

கடந்த 25 ஆண்­டு­க­ளாக அவர் தலை­மயிர் வளர்த்­து ­வ­ரு­கிறார். இக்­கூந்­த­லினால் அவ­ருக்கு பல ரசி­கர்கள் கிடைத்­துள்­ள­துடன் கூந்தல் பரா­ம­ரிப்பு பொருட்­களின் வர்த்­த­கத்தை ஆரம்­பிக்­கவும் அவ­ருக்கு வாய்ப்பு கிடைத்­துள்­ளது.

எனினும், பார­மான கூந்தல் கார­ண­மாக, 47 வய­தான ஆஷா வின் முள்ளந்தண்டு, முதுகு, கழுத் துப் பகுதிகளில் உபாதைகள் ஏற் பட்டுள்ளன. இது ஆரோக்கிய மான விடயம் அல்ல என மருத்து வர்கள் எச்சரித்துள்ளனர்.

1767665 1767SNN1833

26-1377499114-asha-mandela32-600-jpg 26-1377499061-asha-mandela87-600-jpg 26-1377499034-asha-mandela765-600-jpg 26-1377498970-asha-mandela12-600-jpg 26-1377498949-asha-mandela-600-jpg
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ”நான் ஒரு பெண்”.. விக்கிலீக்ஸ்க்கு அமெரிக்க ரகசியங்களைத் தந்த பிராட்லி..!!
Next post இணுவில் பிரதேசத்தில் இளைஞர்களுக்கான தேர்தல் பிரசாரம்..!!