விண்வெளியில் ஹெல்மட்டில் புகுந்த நீர்…விண்வெளி வீரரின் அனுபவம்..!!
விண்வெளி நடையின்போது இத்தாலியைச் சேர்ந்த ஒரு விண்வெளி வீரரின் ஹெல்மட்டுக்குள் நீர் புகுந்து மூச்சு விட முடியாமல் திணறியுள்ளார்.
அவரது பெயர் லூகா பர்மிட்டானோ. சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள அவர் அங்கு விண்நடை மேற்கொண்டபோது, அவருக்கு இந்த திகில் அனுபவம் நேர்ந்துள்ளது. இதற்குக் காரணம் அவரது ஹெல்மட்தான். 36 வயதாகும் லூகா, இத்தாலிய விமானப்படையில் அதிகாரியாக இருப்பவர் ஆவார்.
இது அவருக்கு 2வது விண்நடையாகும். தனது நடையைத் தொடங்கிய 2வது விநாடியே தான் எந்தத் திசையில் போகிறோம் என்பது அவருக்குப் புரியவில்லை.
மேலும் விண் நிலையத்தை மீண்டும் வந்தடைவோமா என்ற சந்தேகமும் வந்து விட்டதாம், மூக்கு வரை வந்து விட்டது…. இது குறித்து லூகா தனது அனுபவங்களை விவரிக்கையில்,
எனது பேக்-பேக்கில் இருந்த ஆக்ஸிஜன் மற்றும் நீர் சிலிண்டர்களில் இருந்து, நீர் எப்படியோ அதிகளவில் ஹெல்மட்டுக்குள் புகுந்துவிட்டது.
அது ஹெல்மட்டுக்குள் நிரம்பி எனது மூக்கு வரை வந்து விட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை. கடுமையாகப் போராட நேரிட்டு விட்டது.
எனது தலையை அசைத்து மூக்கில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற பெரும்பாடுபட்டேன். பதட்டமும், சந்தேகமும்… 3ஃ11 பதட்டமும், சந்தேகமும்… என்னால் சரியாக மூச்சு விட முடியுமா என்ற சந்தேகமும் வந்து விட்டது.
உயிரோடு திரும்பி விண்வெளி மையத்துக்குள் நுழைவோமா என்ற சந்தேகமும் வந்துவிட்டது.
தன்னுடன் உடன் வந்த அமெரிக்க வீரர் கிறிஸ்டோபர் காசிடியையும், விண்வெளி மைய மிஷன் கட்டுப்பாட்டு அறையையும் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.
ஆனால் அவரது மைக்கையும் நீர் மூழ்கடித்துவிட்டதால் அவரல் குரல் உடன் வந்தவர்களுக்குக் கேட்கவில்லை. யாரும் அவர் பேசுவதைக் கேட்கவும் முடியவில்லை.
இதனால் பாதை மாறி விண்வெளி மையத்தைவிட்டு வேறு திசையில் நகர்ந்துள்ளார். தனிமை…கொடுமை 5ஃ11 தனிமை…கொடுமை என்ன செய்வது என்றும் தெரியவில்லை.
வேகமாக விண்வெளி நிலையத்துக்குப் போய் விட்டால்தான் நல்லது என்று மட்டும் தோன்றியது. எப்படியும் கமாண்டர் காசிடி வந்து என்னைக் காப்பாற்றி விடுவார் என்று மட்டும் தோன்றியது.
ஆனால் அவர் வரும்வரை எப்படி சமாளிப்பது என்பது பிரச்சினையாகி விட்டது.
என்னிடமிருந்த கேபிள் ரீகாயில் மெக்கானிசத்தைப் பயன்படுத்தி சரியான திசைக்கு திரும்பினேன். விண்வெளி மையத்துக்குள் நுழைந்து கதவை சாத்தியவுடன் ஹெல்மட்டின் சேப்ட்டி வால்வை திறந்து கொஞ்சம் தண்ணீர் வெளியேற்றினேன்.
வேறு வழியில்லாவிட்டால் எனது ஸ்பேஸ் சூட்டில் ஓட்டை போடுவதைத் தவிர வழியில்லை. அதுதான் கடைசி முயற்சி என்று நான் நினைத்தேன்.
ஆனால் அப்படிச் செய்தால் நான் இறை மோட்சத்தை அடைந்து விடுவேன் என்றும் பயந்தேன். ஆனால் அதற்குள் என்னுடன் வந்த வீரர்கள் என்னை நெருங்கி விட்டனர்.
என் நினைவு தப்பத் தொடங்கிய நிலையில், விண்வெளி மையத்திற்குள் இருந்த பிற வீரர்கள் அவசரமாக செயல்பட்டு என் ஹெல்மட்டையும் கழற்றினர்.
இதனால் தப்பினேன் என்று தனது பிளாக்கில் எழுதியுள்ளார் லூகா. இவர் நவம்பர் மாதம் பூமிக்குத் திரும்புகிறார்.
இந் நிலையில் லூகாவின் ஹெல்மட்டில் எப்படித் தண்ணீர் வந்தது என்பது குறித்து நாசா தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
அவரது உடையில் இருந்த சிலிண்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரால் திடீரென அதிகளவிலான தண்ணீர் ஹெல்மட்டுக்குள் புகுந்துள்ளது.
கடந்த மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து அமெரிக்க வீரர்களின் விண்நடைகளுக்கு நாசா தடை போட்டது குறிப்பிடத்தக்கது.
Average Rating