கொள்கையில்லாமல், கோட்பாடில்லாமல், சொந்தமாக அரசியல் பேச வசதியில்லாமல்…
ஈழ மக்கள் ‘புரட்சிகர’ விடுதலை முன்னணி என்ற இந்திய இராணுவத்தின் துணை அமைப்பாகச் செயற்பட்ட ‘விடுதலை இயக்கம்’த்தின் குறுக்குவெட்டு முகத்தைக் கண்டு அஞ்சிய போது அது இரண்டாகப் பிளவுபட்டு இரு நெடுக்குவெட்டு முகத்தோடு மக்களை அச்சுறுத்தியது. ஒன்று மண்டையன் குழு புகழ் சுரேஸ் பிரமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றது இந்திய உளவாளி வரதராஜப்பெருமாள் தலைமையிலானது.
‘ஈழ’ மார்க்சிஸ்டுக்களது ‘குலதெய்வம்’ ராமர் காட்டில் வாழ்ந்த காலம் பிள்ஸ்(+) நாலு வருடங்கள் இந்திய உளவுத்துறையின் தயவில் வாழ்ந்துண்டு, அந்தக் காலப்பகுதியில் தமது உறுப்பினர்களைப் புலிக்குப் பலிகொடுத்து கொழும்பு வந்திறங்கிய சீமான் வரதராஜப்பெருமாள்.
வரதராஜப்பெருமாளின் அணிக்கு பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் என்று பெயர். ‘அண்ணா’ தி.மு.க போல பத்மநாபா.! ஏதோ மக்களின் வாழ்வாதரப் பிரச்சனையில் பத்மநாபா ஒரு அங்கமாகிவிட்டது போல அவர் ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற அவமானத்தின் முன்னால் ஒட்டிக்கொண்டிருக்கிறார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்கு collection இற்கு பத்மநாபா அணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் விண்ணப்பித்திருந்தது. சட்ட மாமேதையும் நரேந்திர மோடியின் உள்ளூர் வேர்சனுமான விக்கியின் மேல்மட்டம் இதற்கு சம்மதித்திருக்க, முன்னை நாள் மகிந்த ராஜபக்சவின் மீன்பிடி அமைச்சு செயலாளர் சுரேஷ் தலையிட்டு கடைசி நேரத்தில் பத்மநாபா குழுவைக் கடாசி விட்டார்.
அதுவரைக்கு துணைக்குழு தலைவர் ‘தோழர்’ and கௌரவ டக்ளசை கனல் கண்ணால் பார்த்த பத்மநாபா குழு பின்னர் கண்ணீரோரு பார்த்தனர்.
டக்ளஸ் மனதில் ஏதோ தோன்றியிருக்க வெண்டும். ‘நான் இலங்கை ஆமியோடு சேர்ந்து செய்த அதே ‘விடுதலைப் போராட்டத்தை’ பத்மநாபா குழு இந்திய இராணுவத்தோடு சேர்ந்து செய்தனர் அதனால் ஒண்டுகை ஒண்டு என்று எண்ணியிருக்க வேண்டும்.
ஒரு சீட்டுக்காக நண்பனாகக் கருதப்பட்ட தமிழ் தேசியக் கூடமைப்பு எதியாகவும் எதிரியாகக் கருதப்பட்ட டக்ளஸ் குழு நண்பனாகவும் மாறி விட்டனர்.
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று ஆறுதலாக இருந்த நிலையில் கட்சியின் வேட்பாளர் மகிந்த கட்சியோடு சேர்ந்து வாக்குக் கேட்டு சுய மையாதையுடன் மக்களை வாழவைப்பேன் என்று வேறு தமாஸ் பண்ணுகிறார்.
‘வீடில்லாமல், தொழில் இல்லாமல், மலசலகூட வசதியில்லாமல், பிள்ளைகளுக்கு சரியான கல்வியில்லாமல் ,அடிப்படையான மருத்துவ வசதியில்லாமல், மின்சாரம் இல்லாமல், சரியான, செப்பனான பாதை இல்லாமல், போக்குவரத்து வசதியில்லாமல், குடிநீர் அன்னறாட தேவைகளுக்கு நீர் இல்லாமல் வாழ்பவர்களுக்காகவே நான் செயற்பட விரும்புகிறேன்.’ -என்றெல்லம் அச்சடித்து அறிக்கை வடித்துள்ளார்.
கொள்கையில்லாமல், கோட்பாடில்லாமல், சொந்தமாக அரசியல் பேச வசதியில்லாமல், பிள்ளைகளை முட்டாளாக்கி, அடிப்படை நேர்மையில்லாமல்,……. செயற்பட விரும்புகிறேன் என்பதை மாற்றி அச்சடித்து விட்டிருப்பார்கள் என்று சோளன் ஆறுதல்பட்டார்.
-சோளன்
Average Rating