நியூசிலாந்தில் ஓரினசேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம்..!!

Read Time:2 Minute, 1 Second

78284bdf-3fed-4d77-968f-09853dadb33f_S_secvpfதற்போது நோர்வே, சுவிடன், தென்ஆப்பிரிக்கா, கனடா, பெல்ஜியம், டென்மார்க் உள்ளிட்ட 13 நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் அளித்து சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நியூசிலாந்திலும் ஓரின சேர்க்கை திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்டு பல வருடங்களாக போராட்டம் நடத்தினார்கள்.

அதன் பயனாக அந்த திருமணத்துக்கு அங்கீகாரம் அளித்து நியூசிலாந்து பாராளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அது அமல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று அச்சட்டத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து உடனடியாக நேற்று சுமார் 50 ஓரின சேர்க்கை ஆண்களும், பெண்களும் திருமணம் செய்து கொண்டனர்.

ராச்சல் பிரிஸ்கோ – ஜெஸ் இவெஸ் பெண் ஜோடி முதன் முதலில் ஓரின சேர்க்கை திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் ரோடோருவா அங்காட்சியகத்தில் நடந்தது.

இவர்களது திருமணத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம் அளித்த நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து 14–வது இடத்தில் உள்ளது.

அதே நேரத்தில் இத்தகைய திருமணத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ள ஆசிய–பசிபிக் நாடுகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலனைச் சந்திக்க பெண் பொலிஸ் சீருடையில் சென்ற யுவதி கைது..!!
Next post திடீரென உயிரிழந்த சிறுமி கொலை செய்யப்பட்டமை உறுதி..!!