ஆபாச வீடியோக்களுக்கு கதை எழுதியமை அம்பலம்..!!

Read Time:5 Minute, 42 Second

1655jkjfghஅமெரிக்க மாநில செனட் சபை உறுப்பினர் பதவியொன்றுக்கு குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட பெண்ணொருவர், தான் பாலியல் வீடியோக்களுக்கு  ‘கதைகள்’ எழுதியதை அம்பலப்படுத்திய தனது கட்சியின் தலைவர்களிடம்  5.4 கோடிடொலர் (சுமார்  700 கோடி இலங்கை ரூபா) நஷ்டஈடு கோரியுள்ளார்.

ஜெக்ஸைன் புபீஸ் எனும் இப்பெண், கொலராடோ மாநிலத்தின் செனட்சபைத் தேர்தலில் எல்பெசோ நகரத்தில் குடியசுரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட முன்வந்தார்.

ஆனால், தேர்தல் பிரசாரங்களின் போது அவரின் கடந்த காலத்தை அவரின் கட்சியினரே அம்பலப்படுத்தினர். அவர் ஜெக்ஸைன் டேனியல்ஸ் என்ற பெயரில் ஆபாச வீடியோக்களுக்கு கதைகளை எழுதியவர் என்ற தகவல் வெளியானது. அதையடுத்து செனட் சபைத் தேர்தலிலிருந்து ஜெக்ஸைன் புபீஸ் வாபஸ் பெற நிர்ப்பந்திக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது அவர் குடியரசுக் கட்சியின் கொலராடோமா நிலத்தின் தலைவர் ரையன் கோல் மற்றும் பலரிடம் 5.4 கோடி டொலர்களை அவர் நஷ்டஈடாக கோரியுள்ளார். இத்தொகையில் ஒரு 10 இலட்சம் டொலர்களை உடனடியாக வழங்கவேண்டும் எனவும் எஞ்சிய தொகையை 90 நாட்களுக்குள் வழங்கவேண்டும் எனவும்  ஜக்கின்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

கொலராடோமாநிலத்தின், செனட்சபைத் தலைவரான ஜோன் மூர்ஸை எதிர்த்து போட்டியிடும் குடியரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ வேட்பாளரான பேர்ரி ஹேர்பின், அம்மாநிலத்தின் எல்பசோ பிராந்திய கட்சித்தலைவர் ஜெவ்ஹேய்ஸ் ஆகியோரிடமும் ஜெக்ஸைன் நஷ்டஈடு கோரியுள்ளார்.

தான் கதை எழுதிய பாலியல் வீடியோ ஒன்றின் பிரதிகளை சட்டவிரோதமாக பிரதிசெய்து விநியோகிக்கப்பட்டதாக ஜெக்ஸைன் கூறியுள்ளார்

தன்னை மிரட்டுவதற்கும் தனது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கும், பெண்ணொருவருக்கு தீங்கிழைப்பதற்குமாக இவ்வாறு செய்யப்பட்டுள்ளதென அவர்குற்றம் சுமத்தியுள்ளார். அதேவேளை மேற்படி வீடியோவில் கடந்த 8 வருடகாலத்தில் 50 இற்கும் குறைவான பிரதிகளே விற்பனை செய்யப்பட்டதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தீர்மானித்தவுடன் தனது கடந்தகாலத்தை பற்றிய எதிர்மறையான தகவல்கள் வெளிவர ஆரம்பித்ததாக ஜக்ஸைன் புபீஸ் கூறியுள்ளார். தான் மீண்டும் அவ்வாறான பாலியல் வீடியோக்களுக்கான கதைகளை எழுதப்போவதில்லை எனவும் திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு ஒரு சாகசமானது என்ற கருத்தைதான் இப்போது கொண்டிருக்கவில்லை எனவும், ஜக்ஸைன் புபீஸ் தெரிவித்துள்ளார்.

ஜெக்ஸைன்புபீஸ், ஆபாச வீடியோகளுக்கு கதை எழுதியவர் என்ற தகவல் கடந்த மாதம் அம்பலப்படுத்தப்படுவதற்கு முன்னர், மாநில செனட் சபை அங்கத்தவர்கள் உட்பட கட்சியின் பிரமுகர்கள் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரின் கடந்த காலத்தைப் பற்றி தெரிந்தபின் ஆதரவுகள் வாபஸ் பெறப்பட்டன.

கொலராடோ மாநிலத்தில் துப்பாக்கி பாவனையை கட்டுப்படுத்துவதற்குதான் ஆதரவு தெரிவிப்பதால் அங்குள்ள துப்பாக்கி விற்பனை நிலையமொன்றின் உரிமையாளரான போல் பரடைஸ் தன்னைப் பற்றி மோசமான கருத்துக்களை பரப்புவதற்கு முன்னிற்பதாகவும் ஜக்ஸைன் புபீஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜக்ஸைன் புபீஸின் பாலியல் கதைகள் குறித்த மின்னஞ்சலொன்றைதான் மற்றவர்களுக்கு அனுப்பியதாக போல்பரடைஸ் ஒப்புக்கொண்டுள்ளார். எனினும் அந்ததகவல்கள் மூன்றாவது தரப்புக் கூடாக தனக்கு கிடைத்தது எனவும் அவர் கூறினார்.

‘நான் உண்மையல்லாத எதையும் கூறவில்லை. நீங்கள் பொது வாழ்க்கைக்கு வந்தால் உங்கள் வரலாற்றை மக்கள் பார்ப்பார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கவேண்டும். அவர் ஆபாச வீடியோவுக்கு கதை எழுதியவர். நாம் பழமைவாதிகள். அவர் தேர்தலில் போட்டியிடுவது அழிகரமானதாக அமையும்’  என  போல் பரடைஸ் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதுதான் உலகின் மிக பெரிய கப்பலாம்! (VIDEO)
Next post சீன வெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 43ஆக உயர்வு..!!